நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அன்னபூர்த்தி என்ற பெயரில் தற்போது ரேஷன் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிசி மற்றும் கோதுமையை 30 விநாடிகளில் பெற்று கொள்ளலாம். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது சோதனை அடிப்படையில் 3 ரேஷன் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த […]

தமிழ்நாட்டில் பல இடங்களில் மிதமான மழை தொடரும் நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை சில நாட்கள் சதமடிக்கவும் கூட செய்தது. இதற்கிடையே, சில நாட்களாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடுமையான வெப்பத்தில் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இப்போது வெப்பம் […]

இந்திய மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு முக்கிய அடையாள அட்டையாக இருந்து வருகிறது. இந்த ஆதார் கார்டு அரசு நல திட்டங்களின் பயன்களை பெறுவது முதல் வங்கி சேவைகளை பெறுவது வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. அதே போல் இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவருக்கும் பான் கார்டு முக்கியமான அடையாள அட்டையாக இருக்கிறது. பான் கார்டு என்பது 10 இலக்க தனித்துவ எண்ணெழுத்து கொண்ட அடையாள அட்டையாகும். இந்த பான் […]

வாகன தொழில் துறை தர நிர்ணய விதி 140-க்கு ஏற்ப, (ஏஐஎஸ்140) மேம்பாடு, தனி பயணாக்கம், செயலாக்கம் மற்றும் மாநில வாரியான வாகனப் பாதுகாப்புத் தள திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வடிவமைத்துள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 15, ஜனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி, ஏஐஎஸ்-140 தர நிலைகளுக்கேற்ப மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச […]

தமிழகத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழகத்தில் 8.36 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு தமிழ் தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். […]

வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு தினங்களாக மிதமான மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறையும் விரைவில் விடப்படும். நாள் முழுவதும் குழந்தைகள் ஏசி ரூமை விட்டு வெளியில் வரவே வராது. சிலர் பழைய ஏசியை சர்வீஸ் பண்ணி தயாராக வைத்திருப்பீர்கள். இன்னும் சிலர் புத்திசாலித்தனமாக புது ஏசியில் தான் நல்ல குளிர் என கூறி ரூமுக்கு புது ஏசியை மாட்டி விடுவர். என்னதான் […]

நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்திற்கான வங்கி விடுமுறை தினங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகைகள், உள்ளூர் திருவிழாக்கள், பொதுவிடுமுறை என இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாநிலத்தில் என்றென்று வங்கி விடுமுறை என்பதைத் தெரிந்து கொண்டு வங்கி பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். மார்ச் மாதத்துடன் நடப்பு நிதியாண்டு முடிவடைய உள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு, ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய நிதியாண்டில் வங்கி […]

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், […]

உலகின் மிக நீளமான நாக்கை கொண்ட அமெரிக்காவை சேர்ந்த நபர், ஜெங்கா பிளாக் விளையாடி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். பொதுவாக ஆண் ஒருவரது நாக்கின் நீளம் சராசரியாக 7.9 செ.மீ. தான் இருக்கும். பெண்களுக்கு சராசரியாக 8.5 செ.மீ. அளவில்தான் நாக்கு இருக்கும். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு சராசரி அளவைவிட 2 செ.மீ. நீளமாக உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாலினாஸ் நகரைச் சேர்ந்தவர் நிக் […]

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒருவருடத்தில் பிரிட்டானியா நிறுவனம் Treat Croissant என்ற ஸ்னாக்ஸ் 100 கோடி ரூபாய் விற்பனை இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. பிரிட்டானியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கும் பிஸ்கட்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதனடிப்படையில் உலகம் முழுவதும் தனது உணவு பொருள்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் மேற்கத்திய ஸ்னாக்ஸ் வகைகளை அறிமுகம் செய்தது. கடந்த சில வருடங்களாகவே மேற்கத்திய […]