வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01.01.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் […]

காரில் பயணம் செய்யும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பிரத்யேக சீட் ஒன்றை Babyark நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சீட், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சீட்டாக கருதப்படுகிறது. நவீன காலத்திற்கேற்ப புது புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனடிப்படையில், புது புது அம்சங்களுடன் கூடிய வகையில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு ரகங்களில் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை சந்தைகளில் அறிமுகப்படுத்திவருகின்றன. அந்த வகையில் காரில் பயணம் செய்யும் […]

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17,000 ரன்களை கடந்த 6வது இந்திய அணி வீரர் என்ற புதிய சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ரோஹித் ஷர்மா 2007ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். வலது கை ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, இந்திய அணியின் வெற்றிகளில் கணிசமாக பங்களித்துள்ளார். 49 டெஸ்ட், 241 ஒருநாள் மற்றும் 148 டி20 போட்டிகள் ஒட்டுமொத்தமாக 438 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள […]

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியலை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 13ம் தேதி திங்கட்கிழமை 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்க உள்ளன. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்வு அறையில் மாணவர்கள் தவறு செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த […]

தற்கொலை சம்பவங்களை குறைக்கும் வகையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரமாகத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அளித்த பரிந்துரையின் பேரில் அதிக நச்சுத் தன்மை வாய்ந்த மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிஃபோஸ், சைபர்மெத்ரின் மற்றும் குளோர்பைரிபாஸ் ஆகிய ஆறு பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு, 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு ஏற்கனவே 60 நாட்களுக்குத் தடை செய்து தமிழக […]

ஓய்வுபெற்ற அக்னி வீரர்களுக்கு துணை ராணுவமான எல்லை பாதுகாப்பு படையில் சேருவதற்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அக்னிவீரர்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படையில் பணியாற்றலாம் . அதற்கு பிறகு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பணியில் நீட்டிக்கப்படுவர். மற்றவர்கள் வேறு வேலைக்கு செல்ல வேண்டும். தற்போது, அப்படி ஓய்வு பெற்ற […]

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களின் பயன்பாடுட்டை குறைத்தவர்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் இருந்து 15 சதவிகிதம் முன்னேற்றம் கண்டதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தொழில்நுட்ப உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன. தன் […]

நீச்சல் குளங்களில் மேலாடையின்றி குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஜெர்மனியின் பெர்லின் நகர நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் 33 வயது பெண் ஒருவர் பெரிலின் நகரில் உள்ள பொது நீச்சல் குளம் ஒன்றில் தனது திறந்த மார்பகங்களை காட்டியவாறு சூரிய குளியலில் ஈடுபட்டார். தனது மார்பகங்களை மறைக்குமாறு அங்கிருந்தவர்கள் அவரை பணித்ததால் அவர் நீச்சல் குளத்தில் இருந்து பலவந்தமாக […]

உலகில் அதிக பெண் பணக்காரர்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உலகிலேயே பெண் பணக்காரர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 9 பெண் பணக்காரர்கள் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சாவித்திரி திண்டல் 17.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார பெண்மணியாக உள்ளார் […]

உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்க், தனது பெயரில் பெயரில் புதிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அவர் 3500 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும் அமெரிக்காவின் தனியார் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைவராக இருக்கிறார்.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், டுவிட்டர் நிறுவனத்தை […]