இன்றைய வேகமான உலகில், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு முறைகள் அசுரவளர்ச்சியை கண்டுள்ளன. அனைவரது கையிலும் ஒரு ஸ்மார்ட்போன் கண்டிப்பாக இருக்கும். தகவல் தொடர்பை தாண்டி பாடல்கள் கேட்க, படம் பார்க்க, கேம்ஸ் விளையாட மொபைல் பயன்படுகிறது. அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதிக நன்மை மற்றும் தீமை என இரண்டும் நடக்கிறது. அதே சமயம் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொபைல் எண் தொடர்பாக பல்வேறு […]

காலையில் எழுந்தவுடன் வாய் கொப்பளித்த அடுத்த நொடியில் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. இந்த பழக்கம் கடந்த 20 ஆண்டுகளாகவே எல்லோரது வீடுகளிலும் பரவி விட்டது. காலையில் எழுந்ததும் ஒரு டீ காபி, அதில் தொட்டு சாப்பிட ஒரு பண் அல்லது பிஸ்கட் என்பது வாழ்க்கை நடைமுறையாகிவிட்டது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கலாமா? என்றால் எல்லோருக்கும் அது நல்லதல்ல. சிலருக்கு டீ காலையில் வெறும் […]

பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்வதாக உள்ளது. முறைசாரா துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு இதுபோன்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படுவது சுதந்திரத்திற்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய […]

ஆடிப் பெருக்கு எனும் ஆடி பதினெட்டு விழா மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், எந்த திதியில் வந்தாலும் செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். இயற்கை சக்திகளில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் தரப்படும் கிரகம் சந்திரன். காலச்சக்கரத்தின் நான்காவது ராசி அதிபதி சந்திரனுக்கு சொத்து, சுகம், வண்டி, வாகனங்கள் முதலியவற்றை தருகின்ற அதிகாரம் உண்டு. சந்திரன் மனோகாரகன் அதாவது மனதை ஆள்பவன். சந்திரன் சுப கிரகங்களுடன் […]

சமூக பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாக, மிகவும் எளிய நிலையில் உள்ள மற்றும் பெற்றோரின் ஆதரவை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு “அன்பு கரங்கள்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடக்கூடாது என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த உதவித்தொகை, […]

ஜோதிடத்தில் சுக்கிரன் ஒரு முக்கியமான கிரகம். திருமணம், மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பரம், காதல், கலை போன்றவற்றுக்கு இது காரணமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுவாக இருந்தால், அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது, சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். மறுபுறம், குருவும் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நேரத்தில் மிதுன ராசியில் சேரும்போது, கஜலட்சுமி ராஜ யோகம் உருவாகிறது. […]

கிராமப்புறங்களில் “அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தை அடைய அடிப்படை வசதிகளுடன் கூடிய உறுதியான வீடுகளைக் கட்டுவதற்கு தகுதியான கிராமப்புற குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக, ஏப்ரல் 1, 2016 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், 2016-17 முதல் 2023-24 நிதியாண்டில் 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதற்கு உதவி வழங்குவதே ஆரம்ப இலக்காக இருந்தது. […]

நீங்கள் எப்போதாவது விமானப் பயணத்தை முன்பதிவு செய்யும் போது, அதில் 13வ்து வரிசை இல்லை என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? முதலில், இது ஒருவித தொழில்நுட்பப் பிழை அல்லது சீரற்ற வடிவமைப்புத் தேர்வு என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படியல்ல. இது ஒரு பிழையோ அல்லது தற்செயல் நிகழ்வோ அல்ல. உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் வரிசை எண் 13 ஐப் பயன்படுத்த வேண்டாம் என்று ஒரு முடிவை எடுத்துள்ளன.. […]

செயற்கை நுண்ணறிவால் எதிர்காலத்தில் பாதிக்கப்படும் வேலைகளின் பட்டியலை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. அதில் AI குறிவைக்கும் 40 வேலைகளும், அதன் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கும் 40 வேலைகளும் என்னென்ன என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய அளவிலான பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வேலைகள் அதிக ஆபத்தில் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது நல்லது. செயற்கை நுண்ணறிவு, மக்கள் தங்கள் வணிகம் அல்லது தனிப்பட்ட பயன்பாடுகளுக்காக பல்வேறு வகையான […]

இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு இனி 1,000 ஃபாலோயர்கள் அவசியம் என்ற புதிய விதிகளை மெட்டா அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில், சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் புதிய DM மற்றும் பிளாக் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது, லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) அம்சத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனி, இன்ஸ்டாகிராம் பயனர்கள் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய குறைந்தபட்சம் 1,000 ஃபாலோயர்களை (followers) கொண்டிருக்க வேண்டும். 1,000 ஃபாலோயர்களுக்கு […]