பெருந்தொற்று நோயானா கொரோனா அமெரிக்காவில் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பல கோடி மக்களை பாதித்தது. லட்சக்கணக்கானோர் இதில் உயிரிழந்தனர். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது பல நாடுகள் இயல்புநிலைக்கு திரும்பியிருந்தாலும் தொடர்ந்து பாதிப்புகள் ஆங்காங்கே உள்ளது . இது குறித்து ஜோ பைடன் கூறுகையில் ’’ அமெரிக்காவில் […]

இந்தியா,பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், இந்து, முஸ்லீம் இடையே வகுப்புவாதம் வன்முறையாக வெடிதது. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் ஞாயிற்றுக்கிழமை இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்றது. இந்தியா, பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்து ரசிகர்களிடையே மோதல் உண்டானது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் இருக்கும் ஒரு இந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக […]

ரஷ்யா உடனான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பல இந்திய மருத்துவ மாணவர்கள் உக்ரைனுக்குத் திரும்பி, தங்கள் படிப்பைத் தொடர முடிவு செய்துள்ளனர்.. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் அதன் ஏழாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக உக்ரைனில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் தங்களின் சொந்த நாடுகளுக்கு […]

பிரான்ஸ் நாட்டில் கயிறு கூட இல்லாமல் 48 மாடிக் கட்டிடத்தை சரசர வென ஏறும் இந்த ’’ரியல் ஸ்பைடர் மேனை ’’ பார்த்து பொதுமக்கள் விநோதமாக வியக்கின்றனர். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆலைன் ராபர்ட் . இவர் நேற்று தனது 60 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ’’பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் ’’ என மக்களால் அழைக்கப்படும் இவர் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி உலகின் மிகப் பெரிய […]

தைவான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது இதனால்அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தைவானின் யூஜிங்கிற்கு கிழக்கே 7.2 என்ற அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் தலைமட்டமானது. இந்திய நேரப்படி மதியம் 2.44 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர் பல இடங்களில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் […]

சீனாவில் படிகங்களால் நிரப்பப்பட்ட இரண்டு ராட்சத டைனோசர் முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் அன்ஹுய் மாகாணத்தின் கியான்ஷான் பகுதியில் பீரங்கி குண்டு அளவிலான 2 டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளன. இதுகுறித்த தகவல்கள் பழங்கால புவியியல் இதழில் வெளியாகியுள்ளன. இவை டைனோசர்கள் காலத்தின் இறுதிக் காலமான கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்த முட்டைகள் என்பது தெரியவந்துள்ளது. அந்த முட்டைகள் இரண்டும் கிட்டத்தட்ட முழுமையான கோளவடிவிலேயே இருக்கின்றன. முட்டைகளின் அளவு, ஓடுகளின் இறுக்கமான அமைப்பு […]