fbpx

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் 167 பயணிகளுடன் விமானம் ஒன்று, கரீபியன் நாடான பார்படாசில் இருந்து வந்து தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தனர்.அப்போது விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த ‘லேப்-டாப்’ திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பயணிகள் அலறியடித்து ஓட்டம்

விமானத்தில் தீப் …

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). இவருக்கு புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகவே பீலே உடல்நலம் …

தென்கொரியாவில் முதன்முறையாக மூளையை உண்ணும் அமீபா நோயால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக, மூளையை உண்ணும் அமீபா (Brain-Eating Amoeba) எனும் அரியவகை நோய் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாட்டில் கடந்த 4 மாதங்களாக தங்கி இருந்து விட்டு, கடந்த 10ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய …

அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.7,000 கோடியை வசூலையும், இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார்  படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 16-ல் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. …

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா …

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது முழு அடக்குமுறையை ஏவும் விதமாக தாலிபான்கள் அரசாங்கம், கல்வி உரிமையை பறித்திருக்கும் செயல் உலக நாடுகள் மத்தியில் பெரும் விவாதத்தையே உண்டாக்கியிருக்கிறது.

உலகளவில் பெண்கள் எல்லா துறைகளிலும் தங்களை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆப்கானிய பெண்களின் கல்வியை மட்டும் பறிப்பது எந்தளவுக்கு உசிதமானதாக இருக்கும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. …

வட அமெரிக்காவில் வீசும் பனிப் புயலால் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 25 கோடி பேர் பனிப்பொழிவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதுவரை 31 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மோசமான கிறிஸ்துமஸ் குளிர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட வேறு ஊர்களுக்கு சாலை மற்றும் வான் வழியாக பயணிக்கும் …

நேபாளத்தின் புதிய பிரதமராக சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’வை ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று நியமித்தார்.

நேபாள அரசியலமைப்பின் 76வது பிரிவு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெறக்கூடிய பிரதிநிதிகள் சபையின் எந்தவொரு உறுப்பினரையும், பிரதமர் பதவிக்கான கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி …

புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னைகளால் 2100 ஆம் ஆண்டிற்குள் 97 % பென்குயின்கள் உள்ளிட்ட அரிய உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அண்டார்டிகா கண்டம் அரிய வகை உயிரினங்களுக்கு மிகவும் பாதுகாப்பான வசிப்பிடமாக இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்கள் பல பிரச்னைகளை சந்தித்தும், அழிவை நோக்கி நகர்ந்தும் வருவதாக …