fbpx

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகளின் பெயரை, பெண்கள் வைத்துக் கொள்ள அந்நாடு தடை விதித்துள்ளது..

உலக நாடுகளில் இருந்து தனித்திருக்கும் வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள விசித்திரமான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, மிகவும் ரகசியமான நாடாகவும், …

ஸ்பெயின் அரசு, பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது..

கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.. இதன் மூலம், இதுபோன்ற சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த முதல் ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் மாறியுள்ளது. இதன் மூலம் மாதவிடாய் வலியை …

ஜப்பானின் முக்கிய நகரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக வெப்ப நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், குளிக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் ஆர்வமாக இருக்கும். அந்நாட்டினரும் இதனை பெரிதும் விரும்புவர். அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வெப்ப நீருற்றிற்கு சென்று ஜாலியாக இருந்து வருவர். இந்நிலையில், அந்த ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை ரகசிய வீடியோ எடுத்து ஒரு …

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது..

மத்திய பிலிப்பைன்ஸின் மாஸ்பேட் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. மாகாணத்தின் முக்கிய தீவான மஸ்பேட்டில் உள்ள உசன் நகராட்சியில் உள்ள மியாகா கிராமத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் இந்த …

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் காதலர் தினத்தன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, ஸே என்ற நபர் தனது நீண்ட நாள் தோழியான சாய் என்பவரிடம் தனது காதலை வெளிப்படுத்துவதற்காக சிட்னியில் உள்ள கூகி கடற்கரையில் மணலில் அசத்தலான ஏற்பாடுகளெல்லாம் செய்திருந்தார். இந்த செட் அப் கடற்கரையில் இருந்த பார்வையாளர்களை கவர்ந்ததால் அந்த இடத்தில் இருந்தவர்களெல்லாம் ஒன்று …

டொயோட்டாவின் கௌரவத் தலைவரும், நிறுவனர் மகனுமான ஷோய்சிரோ டொயோடா காலமானார்.

டொயோட்டாவின் கௌரவத் தலைவரும், நிறுவனர் மகனுமான ஷோய்சிரோ டொயோடா காலமானார். அவருக்கு வயது 97. டொயோடா இதய செயலிழப்பால் காலமானார் என அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஷோய்ச்சிரோ 1937 இல் நிறுவனத்தை நிறுவிய கிச்சிரோ டொயோடாவின் மூத்த மகன் ஆவார். அவருக்குப் பிறகு தற்போது தலைவரும் …

ஸ்பிரிங்க்ளர் நிறுவனம் 4% ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான ஸ்பிரிங்க்ளர் அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 4 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனம் கடந்த …

சீனாவில் செல்போனில் கேம் விளையாட விடாமல் தடுத்த தந்தையை கத்தியை காட்டி 13 வயது மகன் மிரட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குவாங்சி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பல மணி நேரம் செல்போனில் விளையாடியுள்ளார். இதனால், பெற்றோர் பலமுறை …

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Bard என்ற சாட்போட், கேள்வி ஒன்றுக்கு தவறான பதில் அளித்ததால் 100 மில்லியன் டாலர் சந்தை மதிப்பை கூகுள் நிறுவனம் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால், சாட்ஜிபிடி(ChatGPT) எனப்படும் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி …

வெய்ல் கார்னெல் மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட வாய்வழி உட்கொள்ளக்கூடிய ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டு, அறிவியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வெய்ல் கார்னெல் அறிக்கையில் கூறியதாவது, காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, தேவைக்கேற்ப ஆண் கருத்தடையின் சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துவதாக கூறுகிறது. ஆய்வின் …