US President Donald Trump has announced that he will decide within the next two weeks whether the United States will launch a direct military attack on Iran.
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. எனினும், ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதற்கான ஆதாரங்கள் எதையும் இஸ்ரேல் வழங்கவில்லை. இதனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ‘இஸ்ரேலின் இருப்புக்கே’ ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பின் இரு நாடுகளும் பரஸ்பரம் […]
அமெரிக்காவின் முன்னணி பிராண்டான இன்டெல், அதன் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து அதன் இன்டெல் ஃபவுண்டரி பிரிவில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய அளவில் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதிக்கலாம். இதுதொடர்பாக இன்டெல் உற்பத்தி துணைத் தலைவர் நாகா சந்திரசேகரன், பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், நிறுவனத்தின் தற்போதைய நிதி […]
Southwest Airlines விமானத்தில் பெண் ஒருவர் மதுபோதையில் சக பயணியின் தலை முடியை பிடித்து சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக விமானப் பயணத்தில் சிலர் செய்யும் சேட்டைகள் அத்துமீறி சென்று கொண்டிருக்கின்றன. இப்படித்தான் அண்மையில் அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானி அறைக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அந்த சம்பவத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. இதேபோல, அமெரிக்காவில் இருந்து […]
பல தசாப்தங்களாக HIVக்கு எதிரான சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், மிக முக்கியமான முன்னேற்றமாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக நிறுவனம் (FDA), லெனகாப்பவிர் (Lenacapavir) எனப்படும் புதிய மருந்தை அங்கீகரித்துள்ளது. இந்த மருந்து நீண்ட காலம் செயல்படும் வகையாகும் மற்றும் HIV-யிலிருந்து தெளிவான பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. […]
கடந்த 7 நாட்களாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் கொடியதாக மாறி வருகிறது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிராக ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பழிவாங்க ஈரானும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. சமீபத்திய தாக்குதலில், ஈரான் இஸ்ரேலிய பங்குச் சந்தை மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்துள்ளது, அதன் பிறகு இஸ்ரேலிடமிருந்து இன்னும் பெரிய தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கின் இரண்டு பெரிய […]
ஈரான் கடந்த ஆண்டில் மட்டும் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் உலகிலேயே அதிகளவு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதுகுறித்து ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், அதன் துணை கமிஷனர் நட அல்நாஸிப் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஈரானில் கடந்த 2024ல் மொத்தம் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. துாக்கிலிடுவதன் […]
ஈரான்-இஸ்ரேல் போரில் ‘இராணுவத் தலையீடு’ குறித்து அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா செய்தியாளர்களிடம் பேசிய போது “இந்த சூழ்நிலையில் ராணுவத் தலையீடு குறித்து நாங்கள் குறிப்பாக வாஷிங்டனை எச்சரிக்க விரும்புகிறோம், இது உண்மையிலேயே கணிக்க முடியாத எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்” என்று தெரிவித்தார். புதன்கிழமை, ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு நேரடி […]
இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இனியும் இருக்கக்கூடாது என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் – ஈரான் மோதல் 7வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் இராணுவ உள்கட்டமைப்பு, மூத்த தளபதிகள் மற்றும் அணுசக்தி நிபுணர்களை குறிவைத்து இஸ்ரேலின் எதிர்பாராத வான்வழித் தாக்குதல் நடத்தியதால் […]
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் தான் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கூறி வந்த நிலையில் தற்போது யூ டர்ன் அடித்துள்ளார். அணு ஆயுத மோதலாக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கூறிய ஒரு இராணுவ மோதலை நிறுத்த முடிவு செய்ததற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்தார். இதற்கு முன்பு வரை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் தான் இந்தியா – […]

