அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் ராக்கெட் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தனது அடுத்த ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுதலுக்காக முக்கியமான சோதனையை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ராக்கெட் வெடித்து சிதறியதில் அந்த முயற்சி தோல்வியை தழுவியது. இந்த சோதனை என்பது, ஏவுதலுக்கு முன் இயந்திரங்கள் நம்பிக்கையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யும் இறுதி கட்ட ஆய்வு ஆகும். விபத்தின்போது கட்டிடத்தில் […]

பிரதமர் மோடி ஒரு அருமையான மனிதர் என்று பாராட்டிய ட்ரம்ப், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி “ஒரு அற்புதமான மனிதர்” என்று பாராட்டி உள்ளார். மேலும் மோடி உடன் முந்தைய இரவு தொலைபேசியில் பேசியதை அவர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். […]

அமெரிக்க குடிமக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலம் மோசடியாக குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) கடுமையாக்கியுள்ளது . இந்த மோசடி இப்போது முழு அளவிலான தொழிலாக மாறியுள்ளது என்றும், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். அமெரிக்காவில் விரைவான நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான சிரமமற்ற வழியாக திருமண அடிப்படையிலான க்ரீன் கார்டுகள் (Marriage Green Cards) கருதப்படுகின்றன. […]

ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது. சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, இந்த நிலநடுக்கம் கடலோரத்தில் நிகழ்ந்ததாகவும், அதன் மையப்பகுதி 42.8° வடக்கு அட்சரேகையிலும் 146.4° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருந்தது. தற்போது வரை, சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை […]

காசா மீதான இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெறும் வான்வழித் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் உயிரிழப்புகளை தினசரி பெருக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா முழுவதும் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் […]

உலகத்தில் நரகம் எது என்றால் அது காசாதான் என நிச்சயமாக சொல்லிவிடலாம். அப்படி ஒரு பரிதாபமான, மோசமான நிலைக்கு அப்பகுதி தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களால் காசாவின் கட்டடங்கள் சரிந்து கிடக்கும் நிலையில் அங்குள்ள மக்களுக்கு செல்லும் உணவுகளும் மருந்துகளும் தடுக்கப்பட்டுள்ளன. ஐநா போன்ற அமைப்புகள் தரும் சிறிதளவு உணவுக்காக தட்டை ஏந்தி கிலோ மீட்டர் கணக்கில் அலையும் பரிதாப நிலையில் காசா மக்கள் உள்ளனர். பசியாற உணவு தேடி […]

“ஈரான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது; ஆனால் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த மிகவும் தாமதமாகிவிட்டது ” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அமெரிக்கா இரானின் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அதன் அணுசக்தி மையங்களை இலக்காகக் கொள்ளவோ திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் “அடுத்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த பேச்சு உலக நாடுகளிடையே […]

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 18, 2025) கனடாவிலிருந்து குரோஷியாவை சென்றடைந்தார். குரோஷிய பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சுடனான சந்திப்பின்போது, ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இஸ்ரேல்-ஈரான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆசியாவாக இருந்தாலும் சரி, எந்தவொரு பிரச்சினைக்கும் போர்க்களத்திலிருந்து தீர்வு வர முடியாது என்று பிரதமர் மோடி கூறினார். உலகின் எந்தவொரு நாட்டிற்கும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மரியாதை அவசியம் என்று அவர் கூறினார். […]

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக அந்நாட்டு உச்ச தலைவர் காமெனி தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு முழு அளவிலான பிராந்திய மோதலைத் தூண்டும் என்று ஈரான் எச்சரித்தது. “எந்தவொரு அமெரிக்க தலையீடும் இப்பகுதியில் ஒரு முழுமையான போருக்கு வழிவகுக்கும்” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் […]