Schools: தனியார் பள்ளி வாகனங்களில் இனி CCTV கட்டாயம்…! அதிரடியாக வந்த உத்தரவு…!

தனியார் பள்ளி வாகனத்தில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட வேண்டும்.

இது குறித்து தனியார் பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அனைத்து வாகனங்களிலும் பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளி வாகனத்தில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க நியமிக்க வேண்டும்.

ஓட்டுநர்களுக்குத் தினமும் சுவாச சோதனை செய்தபின் தான் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும். பள்ளி வாகனங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஏப்.5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (தனியார்ப் பள்ளிகள்) உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களில் மாணவியர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக வரும் புகாரையடுத்து தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

வாக்காளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது..!!

Thu Apr 4 , 2024
பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், கடந்த 1ஆம் […]

You May Like