கண்கள் பாதுகாப்பு முக்கியம்… பட்டாசு வெடிக்கும் போது இதையெல்லாம் கவனத்தில் வைக்க வேண்டும்…!

தீபாவளி அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். பட்டாசுகளை வெடிக்கும் பொழுது, சரியான கவனிப்பு எடுக்கப்படாவிட்டால், இது நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக நம் கண்களுக்கு சில ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். இதுபோன்ற ஆபத்துக்களில் இருந்த நம்மை தற்காத்துக் கொள்ள என்ன முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

அதிக ஒளியை உருவாக்கும் பட்டாசுகளை குழந்தைகள் கையில் கொடுத்து வெடிப்பதையும், கண்களால் நேரடியாக பார்ப்பதை கட்டுப்படுத்துவது அவசியம். பட்டாசுகளை வெடிக்கும் போது பாதுகாப்பு கண்ணாடிகள் அவசியம். கண்ணாடிகள் குறிப்பாக பட்டாசுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்க வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு, குழந்தைகள் தங்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும். தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் பரவுவதைத் தடுக்க உதவும், கைகள் சுத்தமாக இருக்கும் வரை, அவர்கள் முகத்தை, குறிப்பாக கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவதன் மூலம் கண்ணுக்குள் விழுந்த மத்தாப்புத்துகள், பட்டாசுத்துண்டுகள் வெளியேறிவிடும். குறைந்தபட்சம் 5 மீட்டர் இடைவெளியில் நின்றபடி வெடிக்கலாம். வெடிகளைக் கையில் கொளுத்தி விளையாடுவதை தவிர்த்தால் கண்களை காக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Vignesh

Next Post

இப்படியொரு சோதனையா?…13 ரன்களில் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் பாக்!… அரையிறுதிக்கு போவது யார்?

Sat Nov 11 , 2023
இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரை இறுதியில் எந்தெந்த அணிகள் தகுதி பெற்று மோதிக் கொள்ளும் என்று 99 சதவீதம் தெரிந்து இருக்கிறது. மீதமுள்ள 1 சதவீதத்தில் இருப்பது பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்புதான். தற்போது அரையிறுதிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என நான்கு அணிகள் தகுதிப்பெற்று இருக்கிறது. வரிசைப்படியே புள்ளி பட்டியலில் இந்த நான்கு அணிகளும் இடம் பிடித்திருக்கின்றன. […]

You May Like