“சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை” அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்….!

சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்(CDSCO) தகவல் தெரிவித்திருந்த நிலையில் அவைகள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்ததில், போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று, வைட்டமின் பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவை என்பது தெரிய வந்தது.

அதில் பெரும்பாலான மருந்துகள், மேற்குவங்கம், இமாச்சலப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் தயாரிக்கப்படுபவை ஆகும். தரமற்றவை என தெரிவிக்கப்பட்ட அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் https://cdsco.gov.in வெளியிட்டுள்ளது. மேலும் தரமற்ற மருந்துகள் தயாரித்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வாரியம் முடிவு செய்துள்ளது.

Read More: பிளாக் ஆன 17000 கிரெடிட் கார்டுகள்!… என்ன காரணம்?… பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதிய கார்டு!

Kathir

Next Post

செம குட் நியூஸ்..!! டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங்..!!

Sat Apr 27 , 2024
2024 டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டார். முன்னதாக உசைன் போல்ட், கிறிஸ் கெயில் ஆகியோர் தூதர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், 3-வது தூதராக யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024 டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் 36 நாட்களில் துவங்க உள்ளது. இம்முறை டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் டி20 […]

You May Like