தமிழகத்திற்கு ரூ.16,79,482 விடுவித்த மத்திய அரசு…!

money Central govt modi 2025

தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க வாரியத்திற்கு ரூ.16,79,482 விடுவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் மாநிலங்களுக்கு ரூ.43.22 லட்சம் மதிப்பிலான காப்புரிமையுடன் கூடிய அணுகல் மற்றும் பயன் பகிர்வு நிதியை விடுவித்துள்ளது. இந்திய உயிரியல் வளங்களை பயன்படுத்தி காப்புரிமைகளை பெறுவதற்கும், புதுமை கண்டுபிடிப்புகளை வர்த்தக மயமாக்குவதற்கும், அறிவுசார் சொத்துரிமை பயன்பாடுகளிலிருந்து இந்த நிதி உருவாக்கப்பட்டது.


ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 16 மாநிலங்களின் பல்லுயிர் பெருக்க வாரியங்களுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டிற்கு ரூ.16,79,482 வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.20,66,553-ம், ஒடிசாவிற்கு ரூ.2,09,965-ம், உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.91,500-ம், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.79,547-ம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகை பல்லுயிர் மேலாண்மை குழுக்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டவுடன் பல்லுயிர் பாதுகாப்பு, நீடித்த வள மேலாண்மை மற்றும் சமூக அடிப்படையிலான வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றை ஆதரிக்கும். இதில் மக்களின் பல்லுயிர் பெருக்க பதிவுகளை உருவாக்குதல் மற்றும் புதுப்பித்தல், பாரம்பரிய முறைகளை ஆவணப்படுத்துதல் மற்றும் இதர உள்ளூர் பாதுகாப்பு முன்முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளும் அடங்கும்.

Vignesh

Next Post

குளிர்காலத்தில் இனி ஹீட்டர் தேவையில்லை!. அறையை சூடாக வைத்திருக்க இந்த 4 எளிய டிப்ஸை டிரை பண்ணுங்க!.

Wed Nov 12 , 2025
குளிர்காலம் வருவதால், அனைவரும் தங்கள் வீடுகளை சூடாகவும் வசதியாகவும் வைத்திருக்க பாடுபடுகிறார்கள். வெப்பநிலை குறையும் போது, ​​ஹீட்டர்கள் மற்றும் ப்ளோயர்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. இவை உடனடி வெப்பத்தை வழங்குகின்றன, ஆனால் மின்சார கட்டணங்களையும் அதிகரிக்கின்றன. இந்த மின் சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துவது சில நேரங்களில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அவை அறையிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, வறண்ட சருமம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும். ஹீட்டர் அல்லது ப்ளோவர் இல்லாமல் […]
heater room

You May Like