பெருகிவரும் போலி மருந்து விற்பனையை தடுப்பதற்கு….! மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!

நாட்டில் பெருகிவரும் போலி மருந்து விற்பனையை தடுக்கும் விதமாக, மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டின் இ பார்மசிகள் மற்றும் இ காமர்ஸ் தளங்கள் மூலமாக, பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளின் சட்டவிரோத விற்பனையை பரிசோதிக்கும் முயற்சி மற்றும் ஆபத்துக்களை முறியடிக்கும் முயற்சியாக மத்திய அரசு இணையதள மருந்து விற்பனைக்காக தேசிய போர்டல் ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த போர்டல் உண்மையானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த போர்டல் மூலமாக, சரி பார்ப்பு இல்லாமல், மருந்துகளை விற்பனை செய்ய இயலாது என்று கூறப்படுகிறது. அத்துடன், நோயாளிகள் மருந்து வாங்குவதற்கு மருத்துவர் கொடுத்த மருந்து சீட்டை, இந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், இதனால், போலி மருந்துகளின் விற்பனை மற்றும் போதை பொருள் விற்கப்படும் செயல் தடுக்கப்படும். இந்த நடவடிக்கை பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் ஒரு முயற்சி என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

இதற்கு இத்தனை சதவீத வரியா, இணையதள சூதாட்டத்திற்கு ஜிஎஸ்டி வரியை அதிகரித்த மத்திய அரசு…..! நாடாளுமன்றத்தில் ஒப்புதல்….!

Fri Aug 11 , 2023
இணையதள சூதாட்டத்திற்கு தற்போது மத்திய அரசு 28 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்தது. அது நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஒரு சில, முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதோடு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த வகையில், கேசினோ, குதிரைப் பந்தயம், இணையதள விளையாட்டுகள், இணையதள சூதாட்டம் போன்றவற்றுக்கு […]

You May Like