இதற்கு இத்தனை சதவீத வரியா, இணையதள சூதாட்டத்திற்கு ஜிஎஸ்டி வரியை அதிகரித்த மத்திய அரசு…..! நாடாளுமன்றத்தில் ஒப்புதல்….!

இணையதள சூதாட்டத்திற்கு தற்போது மத்திய அரசு 28 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்தது. அது நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஒரு சில, முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதோடு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அந்த வகையில், கேசினோ, குதிரைப் பந்தயம், இணையதள விளையாட்டுகள், இணையதள சூதாட்டம் போன்றவற்றுக்கு 28% வரி விதிக்கும் மத்திய ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான இரண்டு மசோதாக்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த சூழ்நிலையில், மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி ஆரம்பமான மழை கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன், முடிவுக்கு வந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

Next Post

என்ன 12ம் வகுப்பு பொது தேர்வில் முறைகேடா…..? ஷாக்கான மாணவர்கள், ஆசிரியர்கள்…..!

Fri Aug 11 , 2023
நடப்பாண்டு, தமிழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளது. தற்போது தெரிய வந்திருக்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில், சென்ற கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதன் பிறகு விடைத்தாள் திருத்தும் பணியானது ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. இத்தகைய நிலையில், மதுரையில் இருக்கின்ற விடைத்தாள் திருத்தும் மையம் ஒன்றில் திருத்தப்பட்ட இரண்டு […]

You May Like