செப்.5-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் எச்சரிக்கை…!

rain 2025 2

தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 2 முதல் 5-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நடைபயிற்சி செய்தால் உண்மையில் கொழுப்பு குறையுமா..? தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்..?

Sun Aug 31 , 2025
உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் இல்லையென பலர் கூறினாலும், தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கும், இதயத்திற்கும் பல நன்மைகளை தரும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, எடை குறைப்பதற்காக ஜிம் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. சாதாரண நடைபயிற்சியே கொழுப்பு அளவுகளை கட்டுப்படுத்த உதவும் எளிய வழியாகும். அதிக கொழுப்பு, குறிப்பாக “LDL” எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரித்தால், அது இரத்த நாளங்களில் படிந்து பிளேக் உருவாக்குகிறது. இதன் விளைவாக மாரடைப்பு, […]
Walking Routine

You May Like