தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை…!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை.

Vignesh

Next Post

பொதுமக்கள் கவனத்திற்கு...! உங்கள் ஆதாரில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்...!

Thu Mar 30 , 2023
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்‌ மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார்‌ அட்டை மத்திய மற்றும்‌ மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள்‌ பெற்றிடவும்‌, வங்கி தொடர்பானவைகளை பெற்றிடவும்‌ பயன்படுகிறது. இந்நிலையில்‌ மத்திய மின்னணு தகவல்‌ தொழில்‌ நுட்ப அமைச்சகம்‌ ஆதார்‌ விதிமுறைகளில்‌ திருத்தம்‌ செய்துள்ளது. அதன்‌ பேரில்‌ ஆதார்‌ அடையாள அட்டைதாரர்கள்‌ 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார்‌ அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்‌. கடந்த 8 முதல்‌ 10 ஆண்டுகளுக்கு முன்னர்‌ […]
pvc aadhar card 1 750x430 1

You May Like