இரவில் வந்த நெஞ்சுவலி.. 6 ஆம் வகுப்பு சிறுவனை பலி வாங்கிய சோகம்..! 

கர்நாடக மாநில பகுதியில் உள்ள குடகு மாவட்டம் கூடு மங்களூருவை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி எனபவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். 

இவரது மகன் கீர்த்தன் (12) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீர்த்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மகனை மருத்துவமனைக்கு அழைத்துபக்கொண்டு செல்லும் வழியில் மகன் உயிரிழந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள் அப்போதே சிறுவன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். 

இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். மாரடைப்பால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா.. குளிர்காலத்தில் நீங்கள் செய்ய வேண்டியவைகள் இதோ..! 

Mon Jan 9 , 2023
குளிர்காலம் நமது சுவாச மண்டலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுவதற்கு வழிவகுக்கும், இதனால் அவர்களின் நிலையை கட்டுப்படுத்துவது கடினம். நுரையீரல் மருத்துவத்தின் தலைவரும், தலைமை ஆலோசகருமான டாக்டர் அர்ஜுன் கண்ணா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆஸ்துமாவால் சுவாச மண்டலத்தில் தொற்று ஏற்படுகிறது. இது மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு வழிவகுக்கும். இதன் மூலம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு […]
கொரோனா

You May Like