திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு பிறப்பித்தார்.. ஆனால் அந்த உத்தரவின் படி தீபம் ஏற்றாததால் பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது..
இந்த சூழலில் இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் “ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அனைவரும் அமைதியை விரும்புகிறார்கள்.. 2 வருடத்திற்கு முன்பு என்ன சூழல் இருந்ததோ அதுவே தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றன.. அதன்படி 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றத்தில் என்ன சூழல் இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும் என்பதே தவெக அரசின் நிலைப்பாடு.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த மதவாத சக்தியும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100% அனுமதிக்க மாட்டோம்..” என்று கூறியிருந்தார்..
இந்த நிலையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பொம்மை, பொம்மை, பொம்மை பார்! திரு. ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்! உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற விடமாட்டோம் என அத்தொகுதியின் தவெக எம்எல்ஏவும் தவெக அமைச்சருமான திரு. நிர்மல்குமார் முஷ்டியை மடக்குகிறார்,
தீபத்தூணை இருளிலேயே வைத்திருப்பது தான் எங்கள் அரசின் நிலைப்பாடு என தவெக அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா முட்டுக் கொடுக்கிறார். முருகபக்தர்களுக்கு எதிராக தவெகவின் வாலும் காலும் இப்படி சலங்கைக் கட்டி ஆடிக் கொண்டிருக்க “தலைமை” என்று கூறிக் கொள்ளும் நீங்கள் இதுகுறித்து இன்னும் ஒருவார்த்தைக் கூட பேசாதது ஏன் திரு. விஜய் அவர்களே?
தமிழகத்திற்கு உண்மையில் யார் தான் முதல்வர்? உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல், ஒரு சாராருக்கு சாதகமாகவும் இந்துக்களுக்கு எதிராகவும் உங்கள் அமைச்சர்கள் இப்படி வாய் வார்த்தைகளால் விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பதற்கா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்? தேர்தலுக்கு முன்பு அமைதி காத்துவிட்டு, ஆட்சியமைத்தவுடன் முருகபக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிராக போர்க்கொடி பிடிப்பது தான் தவெகவின் மதநல்லிணக்க அரசியலா?
சிறுபான்மையின மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக இந்துக்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்யலாம் என்ற திமுகவின் அதே கீழ்த்தரமான எண்ணத்தை பிரதிபலிக்கும் நீங்கள், உண்மையில் தூயசக்தி அல்ல ஒரு “துரோகசக்தி”!” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது..! முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கு அதிமுக, பாஜக கண்டனம்..!



