முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி…! 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை…! உடனே விண்ணப்பிக்கவும்

Mk Stalin Tn Govt 2025

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; பள்ளி, கல்லூரி மாணவ. மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான மாவட்ட மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.83.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டன.

இந்த ஆண்டு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட, மண்டல அளவில் வரும் ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. மாவட்ட அளவில் 25 வகையான போட்டிகள், மண்டல அளவில் 7 வகையான போட்டிகள், மாநில அளவில் 37 வகையான போட்டிகள் என மொத்தம் ரூ.83.37 கோடியில் நடத்தப்படவுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம், குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.37 கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் https://cmtrophy.sdat.in/cmtrophy அல்லது https://sdat.tn.gov.in/ என்ற இணையதளங்கள் வாயிலாக முன்பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். முன்பதிவானது ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் நிறைவடையும். கூடுதல் விவரங்களை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பெண்களை குறிவைக்கும் ஆன்லைன் அச்சுறுத்தல்கள்!. ஒவ்வொரு நகரத்திலும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க உத்தரவு!. உள்துறை செயலாளர் அதிரடி!.

Thu Jul 24 , 2025
அதிகரித்து வரும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், முக்கிய அமைப்புகள் மற்றும் குடிமக்களின் தரவைப் பாதுகாக்க ஒவ்வொரு இந்திய நகரமும் ஒரு தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியை (CISO) நியமிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், ஒவ்வொரு இந்திய நகரத்திற்கும் ஒரு நியமிக்கப்பட்ட தலைமை […]
CISOs Online Content Violation Women 11zon

You May Like