முதல்வர் மருந்தகங்களில்… தமிழகம் முழுவதும் மருந்து பற்றாக்குறை…! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…!

nainar nagendran mk Stalin 2025

முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் தோல், புற்றுநோய் உள்ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் நோக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியால் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்ட மக்கள் மருந்தகத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி ‘முதல்வர் மருந்தகம்” என்ற பெயரில் தமிழகத்தில் திறந்தது திமுக அரசு.

75 சதவீதம் தள்ளுபடியுடன் ஜெனிரிக் மருந்துகள் கிடைக்கும் என விளம்பரப்படுத்திக் கொண்ட முதல்வர் மருந்தகங்களில் தோல் நோய் சம்பந்தப்பட்ட மருந்துகள், குழந்தைகளுக்கான மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட பல மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஜெனிரிக் மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்காக விற்கப்படுகின்றன. ஆனால் முதல்வர் மருந்தகங்களில் வெறும் 300 வகை மருந்துகள் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அதிலும் விற்பனையாகாத மருந்துகள்தான் அதிகளவில் உள்ளதாகவும் மக்கள் கூறுவது, திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

எனவே, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 1000 மக்கள் மருந்தகங்களில் அனைத்து மருந்துகளும் கிடைக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து, முதல்வர் மருந்தகங்களில் உள்ள செயல்பாட்டு சிக்கல்களைத் தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு...! சான்றிதழ் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 7-ம் தேதி வரை அவகாசம்...!

Fri Jul 25 , 2025
மாநில தகுதி தேர்வுக்கு சான்றிதழ் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. செட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் […]
trb teachers recruitment board

You May Like