குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் 2022….! ஆணைகளின் எண்ணிக்கை சரிவு…! முழு ங

கடந்த செப்டம்பர் மாதம் குழந்தைத் தத்தெடுப்பு விதிமுறைகள் குறித்த அறிவிக்கை வெளியானது முதல், நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான தட்டெடுப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கைக்குப் பிறகு இதுவரை 691 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கை வெளியான நாளன்று 905 தத்தெடுப்பு ஆணைகள் நிலுவையில் இருந்தன.

தற்போதைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள ஆணைகளின் எண்ணிக்கை 617 ஆக குறைந்துள்ளது.குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் இனி தங்களது சொந்த மாநிலங்கள்/ பகுதிகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே சமூக-கலாச்சார பின்னணியை சேர்ந்த குடும்பத்தினரும், குழந்தையும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்வதை உறுதி செய்வதற்காக இந்த வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. 10.11.2022 முதல் இந்த தொகுதி செயல்பாட்டிற்கு வந்தது.

அப்போதிலிருந்து இந்தியாவில் வசிக்கும் 2745 பேர், வெளிநாடுகளில் வசிக்கும் 13 இந்தியர்கள், வெளிநாட்டுக் குடியுரிமைப் பெற்ற 15 இந்தியக் குடிமக்கள், 38 வெளிநாட்டவர்கள் புதிய தொகுப்பில் பதிவு செய்திருப்பதோடு, 5 வழக்குகளும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

அது என்ன செறிவூட்டப்பட்ட அரிசி..? அப்படினா என்னனு தெரியுமா..? ரேஷன் கடைகளில் வழங்க காரணம் என்ன..?

Wed Dec 21 , 2022
ரேஷன் கடைகளில் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படவுள்ள நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? என்பதை விரிவாக பார்ப்போம். பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கும் வகையில் உணவின் தரத்தை மேம்படுத்த, அத்தியாவசிய சத்துக்களுடன் அரிசியை செறிவூட்டுவதே செறிவூட்டப்பட்ட அரிசியாகும். வழக்கமான அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. இரும்புச்சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்ற ரசாயனங்களைச் சேர்த்துச் நுண்ணூட்டச் சத்து கலவையை […]
அடுத்த ஷாக்கிங் நியூஸ்..!! அதிரடியாக உயருகிறது அரிசி விலை..!! என்ன காரணம்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

You May Like