திரைத்துறையை பொறுத்தவரையில் பிரபலமான நடிகர், நடிகைகளாக இருந்தால் நிச்சயமாக இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரலாம்.இதில் யாரும் விதிவிலக்கல்ல, மிகப் பெரிய ஜாம்பவான்களும் கூட இது போன்ற சிக்கல்களை சந்தித்து இருக்கிறார்கள்.
அதேபோன்று தற்போது தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ஒரு நடிகருக்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.நடிகர் விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. என்றும் ஆகவே சங்கீதா வெளிநாட்டில் இருக்கின்ற தன்னுடைய தந்தையை வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார் எனவும் தகவல் கிடைத்தது.
இந்த சர்ச்சைக்குரிய தகவலுடன் ஒன்றிணைத்து இன்னொரு தகவலும் தெரிவிக்கப்பட்டது. அதாவது, பிரபல நடிகை ஒருவருடன் விஜய்க்கு தவறான உறவு இருக்கிறது எனவும், இருவரும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் பரவலாக பேசப்பட்டது.
ஆனாலும் அந்த தகவல் உண்மையில்லை, விஜய்யுடன் தவறான உறவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட அந்த நடிகையின் மிக நீண்ட கால காதலரை 4 வருடங்கள் கழித்து தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. அதேபோல அந்த நடிகைக்கும், விஜய்க்கும் இடையில் எந்தவிதமான தவறான உறவும் இல்லை என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தான் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதா அதற்கும் இடையில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்கள்.
சங்கீதா வெளிநாட்டில் இருக்கின்ற தன்னுடைய தந்தையின் வீட்டிற்கு செல்லவில்லை என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தன் மூலமாக விஜய் குறித்து வெளியான சர்ச்சைக்கு பதில் கிடைத்திருக்கிறது.