fbpx

பிக்பாஸ் டைட்டிலுக்கு தகுதியானவர் இவர் மட்டுமே..!! ரசிகர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்த போட்டியாளர்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்துள்ளது. நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரசியத்துடனும் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி இப்போது உச்சகட்ட ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வீட்டில் டம்மியாக இருந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது பிக்பாஸ் விளையாட்டை விளையாடி வரும் போட்டியாளர்கள், கடினமான டாஸ்க்கை நோக்கி முன்னேறி இருக்கின்றனர். ஆனாலும் கடந்த சீசன்களை போல் இதில் இன்னும் உடல் உழைப்பை கொடுக்கும் படியான டாஸ்க் தரவில்லை என்பதே ரசிகர்களின் எண்ணம். இனி வரும் வாரங்களில் அதை நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

பிக்பாஸ் டைட்டிலுக்கு தகுதியானவர் இவர் மட்டுமே..!! ரசிகர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்த போட்டியாளர்..!!

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த ஒரே போட்டியாளராக ஷிவின் இருக்கிறார். நிகழ்ச்சியின் ஆரம்ப நாட்களில் இருந்து தன்னுடைய செயல்பாடுகள் மூலம் அனைவரையும் இம்ப்ரஸ் செய்த இவருக்கு தற்போது ஆதரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த விளையாட்டை சரியாகப் புரிந்து கொண்டு விளையாடி வரும் ஒரே போட்டியாளரும் இவர் தான். இதை கமலே ஒரு முறை கூறி பாராட்டி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் இதுவரை ஒரு வாரம் கூட நாமினேஷனில் சிக்கியது கிடையாது. அந்த அளவுக்கு அனைவருடனும் இணக்கமாக பழகி வரும் இவர் தப்பு என்றால் அதை தட்டிக் கேட்கவும் மறப்பதில்லை.

பிக்பாஸ் டைட்டிலுக்கு தகுதியானவர் இவர் மட்டுமே..!! ரசிகர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்த போட்டியாளர்..!!

அந்த வகையில், நேற்று முன்தினம் இவர் அசீமை எதிர்த்து வாக்குவாதம் செய்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுவரை ரசிகர்கள் மனதில் என்ன இருந்ததோ அதை அப்படியே கூறிய ஷிவினை பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படி வெளியில் இவருக்கான அன்பும், ஆதரவும் அதிகமாக இருக்கும் அதே சமயத்தில் வீட்டிற்குள் இவருக்கான எதிர்வினையும் அதிகரித்துள்ளது. ஷிவினை வீழ்த்தி முன்னேறவும் அசீம் உள்ளிட்ட சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த பிக்பாஸ் டைட்டில் உங்களுக்கு மட்டும் தான் தகுதியானது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

#திண்டுக்கல் : பெற்றோர்கள் செல்போன் வாங்கித்தர மறுத்ததால் விரக்தியடைந்த மாணவன் பூச்சி மருந்து குடித்து இறந்த சம்பவம்..!

Mon Dec 19 , 2022
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஓட்டுப்பட்டியில் விவசாயியான சிங்காரம் தனது மகன் யோகபிரபு(17) . மகன் மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.  இதனிடையில் யோக பிரபு தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு தொடர்ந்து கேட்டு அடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர்கள் செல்போன் வாங்கித்தர மறுத்ததால் சில நாட்களாக யோகபிரபு மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.  இதனா‌ல் விரக்தியடைந்த அவர் சென்ற […]

You May Like