fbpx

நீங்கள் மட்டும் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் தெரியுமா? பிரபல நடிகரை கடிந்து கொண்ட உயர்நீதிமன்றம்!

பொதுமக்களிடையே மிக விரைவில் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு திரைத்துறை தான் ஒரே வழி அப்படி திரைத்துறையில் உள் நுழைந்து. அதன் மூலமாக ஆட்சியை பலர் கைப்பற்றி இருக்கிறார்கள். எம் ஜி ஆர், என் டி ஆர் உள்ளிட்டோர் இந்த சினிமா துறையில் இருந்து தான் அரசியலுக்குள் நுழைந்து, பின்பு பல அதிரடிகளை செய்து செய்து காட்டினர். அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் திரைதுறையில் மட்டும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் பலரும் அந்த திரை துறையில் தனக்கு இருக்கின்ற பிரபலத்தை வைத்து பல தகாத விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் தகாத விஷயங்களில் ஈடுபடுகிறார்கள் என்று அரசாங்கத்திற்கு தெரிந்தாலும் கூட பொது மக்களிடையே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை மனதில் வைத்து இவர்களை நாம் பகைத்துக் கொண்டால் நாம் அரசியலில் நீடிப்பது கடினம் என்று பல தவறான விஷயங்களுக்கு பல மாநில அரசுகள் துணை போய்க்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் மோகன்லால் தற்போது வரையில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்த வருடத்தில் இவர் அடைப்பில் மலையாளத்தில் வெளியான மான்ஸ்டர்12த் மேன், ப்ரோ டாடி போன்ற திரைப்படங்கள் இதற்கு நடுவில் சமீபத்தில் அவரை கேரள உச்சநீதிமன்றம் வன்மையாக கண்டித்த செய்தி வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதாவது கடந்த 2012 ஆம் வருடம் வருமானவரி துறையினர் கேரளாவில் இருக்கின்ற மோகன்லால் அவர்களின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மோகன்லாலின் வீட்டில் 4 யானை தந்தங்கள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். இதனால் வனத்துறையினர் மோகன்லாலின் மீது வழக்குப்பதிவு செய்தனர். பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், மோகன்லால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கேரளா அரசிடம் உதவி கோரினார்.

அத்துடன் கேரள மாநில அரசின் தரப்பில் மோகன்லால் வீட்டில் வளர்க்கப்பட்டு உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் அவர் வீட்டில் வைக்கப்பட்டது என்று விளக்கம் வழங்கப்பட்டது. இதற்கிடையே இந்த மனுவை விசாரித்த கேரளா உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், மோகன்லாலை எச்சரிக்கும் விதத்தில் வன்மையாக கண்டித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்ததாவது, இதுவே தாங்கள் சாதாரண மனிதனாக இருந்திருந்தால் தற்போது சிறையில் கம்பி என்னும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள்.

சாதாரண மனிதனாக நீங்கள் இருந்திருந்தால் கேரள மாநில அரசு தங்கள் பக்கம் நின்றிருக்குமா என்ற கேள்விகளும் மாநில உயர்நீதிமன்றத்தால் எழுப்பப்பட்டது. இவ்வளவு வன்மையாக மோகன்லாலை கேரள மாநில உயர்நீதிமன்றம் கண்டித்தது அவரையும், அவருடைய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தை கேள்விப்பட்ட பலரும் மோகன்லால் தன்னுடைய தவறை மறைப்பதற்காகவே கேரள மாநில அரசை அணுகி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அதன் மூலமாக இந்த வழக்கிலிருந்து லாபகரமாக தப்பித்துக் கொண்டார் என்று பேசி வருகிறார்கள். ஆனாலும் ஒரு நடிகர் என்ற காரணத்தினால் மட்டுமே இந்த ஒரு செயலை மோகன்லால் செய்திருப்பது தவறு எனவும் பலரும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

விலை உயர்ந்த யானை தந்தங்களை எடுப்பதற்காக பல யானைகள் கொலை செய்யப்படும் அவலம் நடைபெற்று வருகின்ற நிலையில், மோகன்லால் யானைகளின் தந்தங்களை சட்டத்திற்கு புறம்பாக தன்னுடைய வீட்டிலேயே வைத்திருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தன்னுடைய 62 வயதிலும் மோகன்லால் பல திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகின்ற நிலையில், இது போன்ற சட்டத்திற்கு புறம்பான வழக்குகளில் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.

Next Post

சின்னத்திரை நடிகை சித்ராவின் கடைசி நிமிடங்கள்! 2 வருடங்களுக்கு பின்னர் புதிய தகவலை தெரிவித்த பிரபலம்!

Sat Dec 10 , 2022
விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சி ரசிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் இவரை எப்போதும் மறக்கவே முடியாது.இவர் முதன்முதலில் தொலைக்காட்சிக்குள் நுழைந்தது மக்கள் தொலைக்காட்சியின் மூலமாகத்தான். பின்பு அங்கிருந்து இவர் வேலை பார்க்காத தொலைக்காட்சியே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பல முன்னணி தொலைக்காட்சிகளில் பிரபலமாக திகழ்ந்து வந்த நடிகை விஜே சித்ரா கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா தொடரில் நடித்து […]
சித்ரா

You May Like