fbpx

பீஸ்ட் திரைப்பட வசூலை மிஞ்ச வாரிசு கையில் எடுத்த புதிய ஆயுதம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்து லட்சோப லட்ச ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் இருபெரும் நட்சத்திரங்கள் விஜயும், அஜித்தும்.திரைத்துறையில் இரு துருவங்களாக இருந்து வருபவர்கள் விஜயும், அஜித்தும் அவர்களைப் போலவே அவர்களுடைய ரசிகர்களும் இரு துருவங்களாகவே செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இருவரின் திரைப்படமும் வெளியாகும் போதெல்லாம் இருவரின் ரசிகர்களிடையே ஒரு பனிப்போர் வெடிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.ஆனால் இப்படி திரைத்துறையில் இருபெரும் துருவங்களாக திகழ்ந்துவரும் இந்த இருவரின் திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானால் தமிழ் ரசிகர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

நடிகர் விஜயின் நடிப்பில் ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கின்ற வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாட்கள் செல்ல, செல்ல ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. அதோடு இந்த படத்துடன் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒன்றாக வெளியாக இருப்பதால் படத்தின் வசூல் வேட்டையை எப்படி கையாள்வது என்ற கண்ணோட்டத்தில் பட குழுவினர் மூழ்கியுள்ளனர்.

இந்த ஆண்டில் அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையிலும், 100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இந்த நிலையில், பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கின்ற துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை விடவும் அதிகமாக வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்றால் துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் திரையரங்கிற்கு விநியோகம் செய்தது தான் என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் 70% திரையரங்குகளில் துணிவு திரைப்படம் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வாரிசு திரைப்படத்திற்கு திரையரங்கு கிடைப்பது சற்றே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்சமயம் வாரிசு திரைப்படத்தின் வசூலை அதிகரிப்பதற்காக நடிகர் விஜய் ஒரு புதுவித ஆலோசனையை பட குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார்.

பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் 120 கோடி வரையில் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்யப்பட்ட சூழ்நிலையில், வாரிசு திரைப்படத்தின் வசூலை அதிகரிப்பதற்காக டிக்கெட் விலையை 500 ரூபாய் வரையில் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டிக்கெட் விலை 120 முதல் 250 ரூபாய் வரையில் திரையரங்கில் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

தற்சமயம் 500 ரூபாய் என்றால் நிச்சயமாக இதன் காரணமாக ரசிகர்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள். காலை 1 மணி 4 மணி என்று 2 காட்சிகள் வாரிசு திரைப்படத்தில் ஒளிபரப்பு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், டிக்கெட்டின் விலையை 500 ரூபாய்க்கு ஏற்றி விலையை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதோடு துணிவு திரைப்படத்தின் வசூலை விடவும் வாரிசு திரைப்படத்தின் வசூல் அதிகரிக்க வேண்டும் என்பதை இதன் நோக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை 500 ரூபாய் கொடுத்து பார்த்தால் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றால் சரிதான். ஆனால் அது தோல்வி அடைந்து விட்டால் அவ்வளவுதான். இருந்தாலும் கூட திரைப்படத்தின் வசூலை அதிகரிக்க ரசிகர்களிடம் டிக்கெட் விலையை ஏற்றி அவர்களுடைய தலையில் கட்டுவது கொஞ்சம் கூட சரியானது அல்ல என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Next Post

நீங்கள் மட்டும் சாதாரண மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் தெரியுமா? பிரபல நடிகரை கடிந்து கொண்ட உயர்நீதிமன்றம்!

Sat Dec 10 , 2022
பொதுமக்களிடையே மிக விரைவில் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு திரைத்துறை தான் ஒரே வழி அப்படி திரைத்துறையில் உள் நுழைந்து. அதன் மூலமாக ஆட்சியை பலர் கைப்பற்றி இருக்கிறார்கள். எம் ஜி ஆர், என் டி ஆர் உள்ளிட்டோர் இந்த சினிமா துறையில் இருந்து தான் அரசியலுக்குள் நுழைந்து, பின்பு பல அதிரடிகளை செய்து செய்து காட்டினர். அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் திரைதுறையில் மட்டும் […]

You May Like