fbpx

இந்த முகூர்த்தத்தில்தான் கவுதம்-மஞ்சிமாவுக்கு திருமணம்…!!

நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சமீபத்தில் காதலை தெரிவித்த நிலைில் அவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடல் திரைப்படத்தில் அறிமுகமானவர் 80ஸ்களின் முன்னணி நடிகரான நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம். இவரும் மலையாள நடிகையான மஞ்சிமா மோகனும் சமீபத்தில் தங்கள் காதலை உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் விரைவில் திருமணம் என்ற தகவலை வெளியிட்டனர்.

இந்நிலையில்  இவர்கள் வரும் 28ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். பின்னர் நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

நடிகர் கவுதம் கார்த்திக் வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிம்பு நடிக்கும் ’பத்து தல’ என்ற படத்திலும் நடித்து வருகின்றார். நடிகர் கவுதம் கார்த்திக் நடிகை மஞ்சிமாவுடன் தேவராட்டம் திரைப்படம் நடித்தார்.

இதையடுத்து இவர்களுக்கு காதல் மலர்ந்துள்ளது. கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமாவும் காதலித்து வருவதாக தகவல் பரவியது. இருவரும் லிவிங் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இருவரும் தங்கள் காதலை இன்ஸ்டாவில் உறுதிப்படுத்தினர். தற்போது திருமணத்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வரவேற்பு பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று பேசப்படுகின்றது. எனினும் குடும்பத்தினர் இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.

Next Post

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…

Sat Nov 12 , 2022
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலனை பெறும் வகையில். மோடி தலைமையிலான அரசு 2024 ஆம் ஆண்டுக்கு முன் இதை பரிசீலிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சட்ட […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! சம்பள உயர்வு குறித்து வெளியான ஹேப்பி நியூஸ்..!!

You May Like