fbpx

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கர்ப்பமான முக்கிய நபர்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த குடும்பத்தினர்!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நெடுந்தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தமிழகத்தை பொறுத்தவரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்த தொடரை தொடக்கத்திலிருந்து பார்த்த நபர்கள் பலர் தற்போது இந்த தொடரை காண்பதில்லை. காரணம் முதலில் இந்த தொடரில் இருந்த கதைக்களம் தற்போது முற்றிலுமாக மாறி வேறு விதமான கதைகளத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர்ஸ் சென்று கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் முல்லை என்றால் தமிழகத்தில் தெரியாத இளைஞர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த தொடரில் ரொமான்ஸ் காதல் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகள் நிறையவே இருந்தனர் ஆனால் தற்போது அப்படி இல்லை.

இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தங்களுடைய சொந்த வீட்டை இழந்து வேறு ஒரு சிறிய அளவிலான வீட்டில் வசித்து வருகிறார்கள். அதேபோல மிகப்பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோராக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ். ஆனால் தற்போது பழையபடி மளிகை கடையாகவே மாறிவிட்டது.

இந்த 2 விவகாரத்திற்கும் பின்னணியில் மீனாவின் தந்தை ஜனார்த்தனன் மூளையாக இருந்து செயல்பட்டு வருகிறார். அதோடு தற்சமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் உணவகத்தையும் மூடுவதற்கு வேறு ஒரு நபர் திட்டம் தீட்டி அதனை செயல்படுத்தியும் முடித்திருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் உணவகத்தை அரசு அதிகாரிகள் வந்து அந்த கடைக்கு சீல் வைத்து விட்டார்கள். ஆனால் என்ன காரணத்திற்காக சீல் வைத்தார்கள்? என்பதை நாளைய எபிசோடில் தான் பார்க்க முடியும்.

இதற்கிடையில் திருமணம் நடைபெற்றதிலிருந்து. குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த ஒரு நபர் என்றால் முல்லை தான் கதிர்முல்லை ஜோடியால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்று ஏற்கனவே மருத்துவர் கூறியிருந்தார். அதற்காக மருத்துவர் ரீதியிலான சிகிச்சை செய்த பின்னரும் கூட அதற்கான எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தற்சமயம் முல்லை கர்ப்பம் தரித்திருக்கிறார். என்ற நல்ல செய்தி வெளியாகியிருக்கிறது. இதுவே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் அடுத்த ட்விஸ்ட் என்று ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Next Post

விஜய் டிவி தொகுப்பாளினி டிடியை பற்றி யாருக்கும் தெரியாத புதிய ரகசியம்!

Sun Jan 1 , 2023
சற்றேகுறைய 20 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளியாக பணியாற்றி வருபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.இவருக்கு விஜய் தொலைக்காட்சியிலும் சரி, விஜய் டிவி ரசிகர்களுக்கு மத்தியிலும் சரி, மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும், காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி தான் மக்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை […]

You May Like