fbpx

சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரத்தாகும் பிரபல சீரியல்கள்..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க இருப்பதால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதால், சீரியல் பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது 6-வது சீசனும் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, தமிழில் புது முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சி, தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தனர். இதில், முதல் பரிசை பாலாஜி முருதாசும், இரண்டாம் பரிசை நிரூப்பும் பிடித்தனர்.

சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரத்தாகும் பிரபல சீரியல்கள்..!

இதனையடுத்து, அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் பாதியிலோ துவங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், நாளுக்கு நாள் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதேபோல் கமல்ஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான ப்ரோமோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரத்தாகும் பிரபல சீரியல்கள்..!

இம்முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில், பொதுமக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும். அதே சமயம் டிஸ்னி பிளஸ் ஸ்டார் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரத்தாகும் பிரபல சீரியல்கள்..!

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விஜய் டிவி முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் இரவு 10 மணி முதல் 11 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்பது அனைவரும் அறிந்து ஒன்று. ஆகையால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலைத் தான் முடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்த சீரியல் ஒரு தெலுங்கு சீரியல்லின் ரீமேக் ஆகும். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதால் இந்த சீரியலை முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி பாரதி கண்ணம்மா தொடரும் இறுதிக் கட்டத்தில் இருப்பதால் இந்த சீரியலும் கூடிய விரைவில் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரத்தாகும் பிரபல சீரியல்கள்..!

Chella

Next Post

நள்ளிரவில் நடந்து சென்ற விவசாயி: டூ-வீலரில் வந்தவரால் நேர்ந்த சோகம்..!

Mon Sep 26 , 2022
வேலூர் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள வளையப்பட்டி ஊராட்சி குரும்பபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (57). இவர் ஒரு கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் இரவு வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் வழியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக டூ- வீலரில் வந்த மர்ம நபர் முன்னால் நடந்து சென்ற கந்தசாமி மீது கவனக்குறைவால் மோதி விட்டு நிற்காமல் […]

You May Like