முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி கல்லூரி திறப்பு…!

College students 2025

நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


நடப்பு கல்வி ஆண்​டில் அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் முதுகலை படிப்பு சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்​பப் பதிவுக்கான காலஅவ​காசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்​த​து. முதல்​வரின் அறி​வுறுத்​தலின் பேரில், மாணவர்​களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது. இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 4-ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பிறகு, சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும். பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கும். கலந்தாய்வு மற்றும் சேர்க்கை பணிகள் முடிவடைந்து முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடேங்கப்பா!. 200% உயர்வா?. அடுத்த 5 ஆண்டுகளில் தங்கம் விலை எவ்வளவு உயரும் தெரியுமா?. தரமான சம்பவம் இருக்கு!.

Mon Jul 28 , 2025
சமீப காலமாக தங்கத்தின் விலையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆறு வருடங்களாக நாம் பார்த்தால், தங்கத்தின் விலைகள் 200 சதவீதம் உயர்ந்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மாதத்தில், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.30,000 ஆக இருந்தது, இது இப்போது 2025 ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் அறிக்கை கூறுகிறது. இந்த ஆண்டும் தங்கம் மிகப்பெரிய வருமானத்தை […]
gold shopping indian gold jewellery with shopping bag 1036975 240891

You May Like