1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம்…! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

school 2025 2

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரநிலை அறிக்கையை பயன்படுத்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுப் பள்ளிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். இந்த அறிக்கையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி செயல்படுமாறு தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

இதுதவிர, தரநிலை அறிக்கையில் மாணவர்களின் அடிப்படை விவரங்களை நிரப்பி, அவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும். ஒவ்வொரு பருவத்திலும் மொத்த வேலை நாட்கள், மாணவர் பள்ளிக்கு வந்த நாட்களின் எண்ணிக்கையை நிரப்ப வேண்டும். திறன் அடிப்படையிலான பகுதிகள், மொழித் திறன்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் திறன்களில் குழந்தையின் தரநிலையை (ஏ, பி, சி) பதிவு செய்ய வேண்டும்.

இதேபோல, கல்வி இணைச் செயல்பாடுகள், விளையாட்டு பங்கேற்பு, குழுப்பணி, படைப்பாற்றல் போன்ற பகுதிகளில் குழந்தையின் ஈடுபாட்டை கருத்தில் கொண்டு, அதற்கான தரநிலையை பதிவுசெய்ய வேண்டும். மேலும், அதில் ஆசிரியர் குறிப்பு, பெற்றோரின் கருத்துப் பதிவு, கையொப்பம் போன்ற பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. மதிப்பெண் அட்டையை பெற்றதும் பெற்றோர் தங்கள் கருத்துகளை எழுத ஊக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மக்களே...! சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை...! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..!

Sun Oct 5 , 2025
திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தீவிர புயல் ‘சக்தி’ நிலவுகிறது. இது இன்று அரபிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி […]
cyclone rain 2025

You May Like