BIG NEWS: MLA பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்…! ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை புறக்கணித்த காங்கிரஸ்…!

ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை காங்கிரஸ் புறக்கணித்ததால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்.

அயோத்தியில் நடைபெறவுள்ள ஸ்ரீராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார்.

ஸ்ரீராமர் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது, 100 கோடிக்கும் அதிகமான நாட்டு மக்களின் பல நூற்றாண்டு கால கனவு. அதனால்தான், காங்கிரஸ் உள்பட அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், முக்கிய பிரமுகர்களுக்கும், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பிதழ்களை வழங்கியது.

காங்கிரஸ் கட்சி, ஸ்ரீராமர் கோயில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் நிகழ்ச்சி நிரல் எனக் கூறி கும்பாபிஷேக அழைப்பிதழை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ சிஜே சாவ்தா ராஜினாமா செய்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை காங்கிரஸ் புறக்கணித்ததால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

புற்றுநோய் செல்களை அழிக்கும் வாழை இலை ஜூஸ்.! வேறு என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?

Sat Jan 20 , 2024
பொதுவாக வாழை மரத்தில் இலை, காய், பழம், தண்டு என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாகவும், உணவிற்கும் பயன்பட்டு வருகிறது. அதுபோல தமிழ்நாட்டில் பல குடும்பங்களில் வாழை இலையில் விருந்து வைப்பது குறித்து கேள்விப்பட்டிருப்போம். இது உடலுக்கும் பல நன்மையை தரும். இதன்படி வாழை இலையை ஜுஸாக செய்து குடித்து வருவதன் மூலம் பல நோய்கள் குணமாவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதிகமாக ஆண்டிஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ள வாழை இலையை ஜுஸ் […]

You May Like