Election | “மகளுக்காக தேர்தலில் உள்ளடி வேலை செய்யும் தந்தை”… அதிருப்தியில் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள்.!

Election: தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் உள்ளிட்ட மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பாடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

கடந்த தேர்தல்களில்(Election) அதிமுக ஆதரவுடன் தமிழகத்தில் களம் கண்ட பாஜக இந்த முறை தங்களது தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. பாரதிய ஜனதா கட்சியுடன் பாமக போன்ற முன்னணி கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. தமிழகத்தின் முன்னணி மாநில கட்சிகளில் ஒன்றான பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பாமக சார்பாக டாக்டர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

இவர் முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிடுவதால் அவரது தந்தை கிருஷ்ணசாமி தனது மகளுக்கு ஆதரவாக தர்மபுரியில் செயல்பட்டு வருகிறார் என காங்கிரஸ் கமிட்டியினர் குற்றம் சாட்டி இருக்கின்றனர். மகளுக்கு ஆதரவாகவும் கட்சிக்கு எதிராகவும் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி பல உள்ளடி வேலைகளை செய்து வருவதாகவும் காங்கிரஸ் கமிட்டி குற்றம் சாட்டி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆன கிருஷ்ணசாமி தனது மகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் அவருக்காக பல தலைமுறைவு வேலைகளை செய்து வருவதாக காங்கிரஸ் கமிட்டி குற்றம் சாட்டியிருக்கிறது. மேலும் தர்மபுரியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்களை தனது மகள் சௌமியாவிற்கு எதிராக வேலை செய்ய வேண்டாம் என கூறி வருவதாகவும் அந்தக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Read More: போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ‘தங்கலான்’ படக்குழு!

Next Post

மோடி மீண்டும் பிரதமராக விரலை துண்டித்த பிரமுகர்!

Sun Apr 7 , 2024
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது விரலை துண்டித்துக்கொண்டார். உத்தரகன்னடா, கார்வாரின் சோனாரவாடா கிராமத்தை சேர்ந்தவர் அருண் வர்னேகர், 35. இவர் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசி. தன் வீட்டில் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்கிறார். வீட்டின் அறைகளில் தேசிய தலைவர்களின் படத்தை ஒட்டியுள்ளார். கடந்த முறை லோக்சபா தேர்தல் நடந்தபோது, […]

You May Like