ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் 3 இடங்களில் போட்டி!

ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 3 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதன்படி, இவ்விரு கட்சிகளும் தலா 3 மக்களவை தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

ஜம்மு, லடாக், உதாம்பூர் மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் ஸ்ரீநகர், ஆனந்த்நாக், பாராமுல்லா மக்களவை தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்த மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி, அக்கூட்டணியிலிருந்து விலகுவதாய் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து அக்கட்சி ஜம்மு காஷ்மீரில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Post

Annamalai | கோவையில் பரபரப்பு.!! பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட நபரை தாக்கிய பாஜக தொண்டர்கள்.!!

Mon Apr 8 , 2024
Annamalai: கோவையில் பாஜக(BJP) தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தின் போது கேள்வி கேட்ட நபரை பாஜக தொண்டர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் […]

You May Like