தொடரும் பதற்றம்; உச்சம் தொட்ட இழப்புகள்!. ஈரான் போரால் 770-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு!.

us770pentagonnoted

ஈரான் போரினால் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மோதலில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 770-ஐக் கடந்துள்ளதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போரை அமெரிக்கா தொடங்கியதிலிருந்து 18 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும், 756 பேர் காயமடைந்துள்ளனர் எனப் பென்டகனின் casualty reporting system தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா போரைத் தொடங்கிய நிலையில், தற்போது இந்த மோதல் தனது ஆறாவது மாதத்தில் நுழைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், சமீபத்தில் காயமடைந்த புதிய வீரர்களின் பெயர்களைப் பென்டகன் தரவுத்தளத்தில் சேர்த்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் திங்கட்கிழமையுடன் காலாவதியான நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை நீட்டிக்கவில்லை. இருப்பினும், போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தாலும் இரு தரப்பிலும் பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் மீண்டும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து பதற்றமான பகுதியாகவே நீடிக்கிறது. எனினும், ஈரான் விவகாரத்தில் தற்போதைய சூழல் “மிகவும் நன்றாக உள்ளது” என்று அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

உலகின் NO.1 வீராங்கனைகளை மிரள வைத்த ட்ரீசா - காயத்ரி ஜோடி!. BWF  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று அசத்தல்!.

Sun Aug 23 , 2026
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் ஜோடியான ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன்களான சீனாவின் லியு ஷெங் ஷு மற்றும் டான் நிங் ஜோடியை எதிர்த்து விளையாடிய இந்திய இணை, மூன்று செட்டுகள் வரை கடுமையாகப் போராடியது. எந்தவித தரவரிசையும் இன்றி களமிறங்கிய இந்திய ஜோடி, முதல் சுற்றில் உலக முதலிடமான சீன ஜோடியை […]
TreesaJollyGayatriGopichand

You May Like