கொரோனா பாதிப்பு… மாணவர்களுக்கு முக கவசம் கட்டாயம்…! அரசு அதிரடி உத்தரவு

covid 2025 1

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது. கடந்த மே 26-ம் தேதி நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,010 ஆக இருந்தது. இது 30-ம் தேதி 2,710 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கொரோனா பாதிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக் குழந்தைகளிடம் காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் காணப்பட்டால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்படி தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள். முழுமையாக குணமடைந்த பின்னரே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகளுடன் பள்ளிக்கு வந்தால், ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோருக்குத் தெரிவித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களிடையே இந்த அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட வேண்டும். கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: பள்ளி & கல்லூரி ID கார்டு இருந்தால் போதும்…! அரசு பேருந்தில் இலவச பயணம்..! அமைச்சர் அசத்தல் அறிவிப்பு…!

Vignesh

Next Post

இனி டிராவலின்போது காரில் வைத்த தண்ணீரை குடிக்காதீங்க!. ஏன் தெரியுமா?

Sun Jun 1 , 2025
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் கையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக பயணத்தின் போதும் கூட பலர் வாட்டர் பாட்டிலை வைத்து கொள்கின்றனர். இருப்பினும், சூடான காரில் வாட்டர் பாட்டிலை வைத்து செல்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காரில் 24 மணி நேரத்திற்கு மேலாக வாட்டர் பாட்டிலை வைத்திருப்பது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது […]
car travel water 11zon

You May Like