நீதிமன்றம் கொடுத்த உத்தரவு… திமுக MLA பொன்முடிக்கு அடுத்த சிக்கல்…!

Ponmudi Highcourt 1

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையில் ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வெறுப்புப் பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

புகார் மனு, எம்.பி – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு குறித்து அக்டோபர் 30-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

Alert: வங்கக்கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.‌‌..! 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை...!

Fri Oct 24 , 2025
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று அரபிக்கடலில் நிலவக்கூடும். அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த […]
rain 1

You May Like