பண மோடி.. NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேவநாதன் யாதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு…!

devanathan 2025

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேவநாதன் யாதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.இந்த வழக்கில் தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் தேவநாதன் உயர் நீதிமன்ற ஜாமின் நிபந்தனைகள் நிறைவேற்றவில்லை என சுட்டிக்காட்டினர்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாத தேவநாதனை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜாமீன் நிபந்தனைகளை மாற்றி அமைக்க கோரி தேவநாத யாதவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தேவநாதன் யாதவ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஜாமீன் நிபந்தனையை நிறைவேற்ற மேலும் கால அவகாசம் வேண்டும் என்றும், அனைத்து சொத்து ஆவணங்களையும் காவல்துறை பறிமுதல் செய்து விட்டதாகவும் விடுமுறை நாட்கள் போக குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே இருந்ததாக வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் ராஜ் திலக், ஏற்கனவே அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு கேட்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து தேவநாதனை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

மனித உடலில் எந்தப் பகுதி மிகவும் குளிராக உணர்கிறது?. அறிவியல் காரணம் இதோ!

Fri Nov 14 , 2025
நாடு முழுவதும் குளிர் காலம் வந்துவிட்டது. இந்தப் பருவம் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. எனவே, இந்தப் பருவத்தில் ஆரோக்கியமாக இருக்க குளிரை தவிர்ப்பது அவசியம். இந்தப் பருவத்தின் குளிர் காற்று ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கம்பளி ஆடைகளை அணிவது முதல் நெருப்பில் கைகளை சூடேற்றுவது வரை மக்கள் அனைத்தையும் நாடுகிறார்கள். வெப்பநிலை குறையும் போது, ​​சில உடல் பாகங்கள், குறிப்பாக வெப்பநிலைக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை, குளிரால் முதலில் […]
body part coldest

You May Like