Alert: மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்…! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!

cyclone rain 2025

இன்று, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தெற்கு ஒடிசா, அதை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகின்றன. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

25-ம் தேதி வரை மத்திய மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்-கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கையில் விலங்கு போட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஒபாமா!. டிரம்ப் வெளியிட்ட AI வீடியோவால் சர்ச்சை!.

Tue Jul 22 , 2025
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கையில் விலங்கு போட்டு FBI அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவை, டிரம்ப் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வீடியோ, ஒபாமா டிரம்புடன் பேசிக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதை காட்டுகிறது. […]
Obama jail trump AI video 11zon

You May Like