ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. இந்த சூழலில் வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. மேலும் கேஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 21 நாட்கள் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதை 25 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. அதன்படி சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது வளைகுடா போரால் உலகளவில் கேஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. மாற்று எரிசக்திகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.. கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுளது.
இந்த சூழலில் வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல் சேவைகள் முடங்கும் நிலை உருவாகி உள்ளது.. பல முன்னணி ஹோட்டல்களில் 48 மணி நேரத்திற்கு சிலிண்டர் கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் வணிகர்கள் உடனான சந்திப்பை தொடர்ந்து உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.. சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.. வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்..
வணிக பயன்பாட்டுக்கான விநியோகம் பல நகரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.. இதனால் உணவங்கள் மூடப்படும் நிலையில் உள்ளது.. சில ஹோட்டல்கள் உணவு வகைகளையும், நேரத்தையும் குறைக்க முடிவு செய்துள்ளன.. இதுகுறித்து மத்திய மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் கோர்க்கை விடுத்துள்ளனர்.



