அடடே..!! இந்த நடிகைக்கு இப்படி ஒரு திறமையா..? பதக்கம் வென்ற நிவேதா பெத்துராஜ்..!! எந்த விளையாட்டில் தெரியுமா..?

நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்மிண்டன் விளையாட்டில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

’சங்கத்தமிழன்’, ‘ஒருநாள் கூத்து’, ‘திமிரு பிடிச்சவன்’, ‘பொன் மாணிக்கவேல்’ போன்றப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். குறிப்பாக, ‘ஒருநாள் கூத்து’ படத்தில் ‘அடியே அழகே’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். 2015ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ’மிஸ் இந்தியா அழகி’ பட்டத்தை வென்ற இவர், மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்தார்.

நடிப்பு, மாடலிங் மட்டுமல்லாது இவர் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர். ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ’ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ரேஸிங் பயிற்சியில்’ கலந்து கொண்டு அசத்தினார். இந்நிலையில், பேட்மிண்டன் போட்டியிலும் நிவேதா பெத்துராஜ் அசத்தியுள்ளார். டால்ஃபின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட் நடத்திய இந்த பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணிக்காக இரட்டையர் பிரிவில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் அதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில், நிவேதாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Chella

Next Post

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! ரூ.50,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!!

Tue Jan 23 , 2024
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள “பதிவறை எழுத்தர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணி வகை : தமிழக அரசு வேலை துறை : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் பணி : பதிவறை எழுத்தர் (Record Clerk) கல்வி தகுதி : அரசு அல்லது அரசால் […]

You May Like