பிரபல டிக் டாக் மற்றும் ரீல்ஸ் பிரபலமான டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புகழ்பெற்ற டான்ஸரான ரமேஷ் தனது டிக் டாக் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களின் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகிய டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியில் அவர் போட்டியாளராக கலந்து கொண்டு நிறைய ரசிகர்களை பெற்றார்.
இவரது நடன இயக்கத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருவது வழக்கம். சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் கூட டான்சர் ரமேஷ் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், சென்னை கேபி பார்க் குடியிருப்பில் இருக்கும் பத்தாவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் மது போதையில் கீழே விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவரது மரணம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.