ச்சீ.. சொத்துக்காக இப்படியா..? தாயை கொன்று கற்பழிப்பு போல் நாடகமாடிய மகள்..! விசாரணையில் வெளியான திடுக் தகவல்..

Crime 2025 11

திருப்பத்தூர் மாவட்டம், நடுகுப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். அவரது மனைவி சின்னகாளி (45). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆன இரண்டு மகள்கள் உள்ளனர். சாம்பசிவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை குறைபாடு காரணமாக இறந்துவிட்டார். தாய்க்கு துணையாக அவரது இளைய மகள் கீதா அவரது கணவர் சிதம்பரம் மற்றும் இரண்டு பிள்ளைகளோடு தாய் வீட்டில் வசித்து வருகிறார்.


இதனிடையே சின்னக்காளி பெயரில் உள்ள 6 ஏக்கர் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்கும் படி கீதா கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கீதாவுக்கு எழுதி வைக்காமல் சின்னகாளி அவரது கள்ளக்காதலன் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த கீதா தாய் சின்னகாளியிடம் சண்டை போட்டு உள்ளார். ஆனாலும் கீதா பெயரில் சொத்தை எழுதி வைக்க முன்வராத காரணத்தினால் சின்னகாளி மீது கடுமையான கோபத்தில் கீதா இருந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது கணவருடன் சேர்ந்து தாயை கொலை செய்ய திட்டம் போட்டு உள்ளனர். அதன்படி சில நாட்களுக்கு முன்பு நடுகுப்பம் பகுதியில் உள்ள வீட்டின் அருகே உள்ள காட்டிற்குள் கீதா தனது தாய் சின்னகாளியை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு மறைந்து இருந்த மருமகன் சிதம்பரம் (25) சின்னகாளியிடம் சொத்து குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் மகள் கீதா தாய் சின்னகாளியின் கையை பிடித்து கொண்டுள்ளார். அப்போது கல்லை கொண்டு சிதம்பரம் மாமியாரின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளான். சின்னகாளி அணிந்து இருந்த ஆடைகளை கலைத்து விட்டு சம்பவ இடத்தில் பூ, கர்சீப் போட்டு விட்டு சின்னக்காளியை அவரது கள்ளக்காதலன் கற்பழித்து கொலை செய்தவாறு சித்தரித்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

காட்டிற்குள் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் எதுவும் தெரியாதது போல தாயின் உடல் முன் அழுது நாடக மாடி உள்ளார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை செய்ய வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவ பரிசோதனையில் பலாத்காரம் நடந்தது போல எதுவும் தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கணவன் மனைவி இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலம் ஆனது. இதனையடுத்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: ரேஷன் கடைகளில் பெண்களுக்கு இலவச நாப்கின்..? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

English Summary

Daughter who killed her mother in Tirupattur and pretended to rape her..! Shocking information revealed during the investigation..

Next Post

சுவர் இடிந்து விழுந்து அரசுப் பள்ளி மாணவன் பலியான விவகாரம்.. 3 பேர் மீது வழக்குப்பதிவு..!

Wed Dec 17 , 2025
திருவள்ளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி […]
thiruvallur school

You May Like