நோட்..! மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம்…! அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!

Tn Govt 2025

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களைப் பூர்த்தி செய்யப்பட்டவுள்ளன. ஏற்கெனவே, விண்ணப்ப பதிவு மேற்கொள்ள தவறிய மாணவர்களும் இணையதளத்தில் பதிவை மேற்கொள்ள உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடன் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கு இணையத்தில் விண்ணப்பப் பதிவை செப்டம்பர் 30 வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பாகிஸ்தான் பேரழிவு!. கனமழையால் 24 மணிநேரத்தில் 21 பேர் பலி!. இதுவரை 1000-ஐ நெருங்கியது பலி எண்ணிக்கை!.

Sat Sep 6 , 2025
பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது . கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர், பெரும்பாலும் ஆற்று வெள்ளம் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஏற்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் புனர் மாவட்டத்தில் 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி […]
pakistan flood rain

You May Like