நெருங்கும் தேர்தல்.. தவெகவுக்கு வலை வீசும் டெல்லி.. பிடி கொடுக்காத விஜய்.. ஒர்க் அவுட் ஆகுமா பாஜகவின் தேர்தல் வியூகம்..?

vijay bjp

தமிழ்நாடு அரசியல் தற்போது மாற்றம் நிறைந்த பருவத்தை சந்தித்து வருகிறது. திமுக ஆட்சியின் வலிமை ஒருபுறம் நிலைத்து நிற்க, மறுபுறம் பாஜக தனது பாதையை வலுப்படுத்த புதிய அரசியல் கணக்குகள் போடுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, பாஜக எடுத்துள்ள அணுகுமுறை வெறும் மனிதாபிமானம் அல்ல, அரசியல் கணக்கு என்பதைக் காட்டுகிறது.


அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த பாஜக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இடப்பங்கீடு பேச்சுவார்த்தைகளை துவங்கியிருக்கிறது. ஆனால் அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி மோதல்கள், பாஜக – அதிமுக கூட்டணிக்கு நிலைத்தன்மை தரவில்லை. செங்கோட்டையன்-எடப்பாடி மோதல், அண்ணாமலை-நயினார் நாகேந்திரன் கருத்து வேறுபாடு, பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் வெளியேறல் போன்றவை கூட்டணியின் பலவீனத்தைக் காட்டுகின்றன.

இந்நிலையில் பாஜக வட்டாரங்கள் “மூன்றாவது சக்தி” எனும் சாத்தியத்தைக் கவனித்து வருகின்றன. அந்த வாய்ப்பு தற்போது விஜயை நோக்கி செல்கிறது. 51 வயதிலேயே பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜய், “தமிழகத்தின் எதிர்கால அரசியல் சக்தி” என்று பார்க்கப்படுகிறார். அதிமுக வாக்கு சிதைந்தால், விஜய் தலைமையிலான தவெக உயர வாய்ப்பு இருப்பதாக பாஜக கணக்கிடுகிறது.

இதன் விளைவாக பாஜக, விஜயுடன் “அமைதியான அரசியல் உறவை” பேணத் தொடங்கியுள்ளது. கரூர் நிகழ்வுக்குப் பிறகு, தமிழிசை, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கரூரில் முகாமிட்டனர். அண்ணாமலை இலங்கை பயணத்தை ரத்து செய்து நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்றார். கரூர் மாவட்ட பாஜக சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோரும் விஜய்க்கு நெருக்கமான அறிகுறிகளை வெளிப்படுத்தினர்.

அதே நேரத்தில், “இந்த கூட்ட நெரிசல் இயல்பானது அல்ல, இதில் உள்நோக்கம் இருக்கலாம்” என பாஜக வட்டாரங்கள் வெளிப்படையாகக் கூறுவது, திமுக அரசை குறிவைத்து விஜய்க்கு மறைமுக ஆதரவாக மாறி உள்ளது. தற்போது பாஜக – விஜய் இடையே தொடர்ச்சியான ஆலோசனைகள் நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணியில் உள்ள நடிகர் ஒருவரும் விஜயுடன் விரைவில் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதனால் அடுத்த சில வாரங்களில் தமிழ்நாட்டு அரசியல் வரைபடம் மாற்றமடையும் வாய்ப்பு அதிகம். விஜய்க்கு எதிராக நடைபெறும் சட்ட நடவடிக்கைகள் தீவிரமாவதோடு, பாஜக பக்கம் அதனை சமாளிக்கும் ரகசிய அரசியல் பிளான் அமைக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

Read more: உடல் எடையை குறைக்க போறீங்களா..? இந்த 5 கட்டுக்கதைகளை நம்பாதீங்க..!! ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்..!!

English Summary

Delhi is throwing a net at Vijay.. Will the TVK leader submit..? The political chess game begins

Next Post

திருநங்கையுடன் கள்ளத்தொடர்பு..!! ரவுடியுடன் உல்லாசம்..!! நிர்வாண டான்ஸ் ஆடும் இன்ஸ்டா பிரபலம்..!! கடலூரில் பகீர் சம்பவம்..!!

Mon Oct 6 , 2025
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், செந்தில்வேல் என்பவரை காதலித்துத் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, மகேஸ்வரி இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால், குழந்தைகளையும் கணவனையும் புறக்கணித்து ஆடம்பரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், செந்தில்வேல் வழிப்பறி வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றதும், திருநங்கைகளுடன் நெருங்கிப் பழகியதும் தெரியவந்துள்ளது. செந்தில்வேலுக்கு ஜாமீன் பெற, மகேஸ்வரியின் […]
Insta 2025 1

You May Like