இலுப்பை மரத்தால் செய்யப்பட்ட வைரத் தேர்.. தமிழ்நாட்டில் உள்ள இந்த அதிசய கோயிலை தெரியுமா..?

temple 1

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற கழுகுமலை அகிலாண்டேஸ்வரி சமய ஜம்புநாதீஸ்வரர் கோயில். மற்ற கோயில்களிலிருந்து மாறுபட்ட அமைப்புடன் விளங்கும் இந்த ஆலயம், அதன் ‘வைரத் தேர்’ காரணமாக பெரும் புகழ் பெற்றுள்ளது. இலுப்பை மரத்தால் செய்யப்பட்டு, வைரம் பாய்ந்த பலகைகளால் அமைக்கப்பட்ட இந்தத் தேரை பக்தர்கள் அன்புடன் வைரத் தேர் என அழைக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவின் பூரம் நட்சத்திரம் அன்று இந்த வைரத் தேர் வீதியுலா வந்து பக்தர்களின் பேரன்பை பெறுகிறது. மற்ற முருகன் கோயில்களிலிருந்து மாறுபட்டு, இங்குள்ள மயில் வாகனம் இடப்புறம் தலை, வலப்புறம் தோகை அமைப்புடன் அரிய காட்சியளிக்கிறது.

இந்த கோயில் அமைந்துள்ள மலை யானை படுத்திருப்பதைப் போல தோற்றமளிக்கிறது. முழுவதும் மலையை குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில் என்பதால், இங்கு விமானமும் சுற்றுப்பிராகாரமும் இல்லை. பக்தர்கள் மலையைச் சுற்றியே பிராகார வலம் வருகின்றனர். சுமார் 300 அடி உயரமுள்ள இந்த மலையில், கருவறையும் அர்த்த மண்டபமும் நேரடியாகப் பாறையை குடைந்தே அமைக்கப்பட்டுள்ளன.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் 1 முகம், 6 கரங்கள் கொண்ட அரிய கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த ரூபத்தில் முருகன் தென்னிந்தியாவில் இந்தத் தலத்தில் மட்டும் தான் இருப்பதாகக் கூறப்படுகிறது. கோயிலின் தெப்பக் குளத்தில் உள்ள நீர் பால் போன்ற நிறத்தில், மிகச் சுத்தமான குடிநீராக விளங்குகிறது. அதனால் சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் இந்தக் குளத்தின் நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

Read more: தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா..? நோட் பண்ணுங்க..!

English Summary

Diamond chariot made of Iluppai wood.. Do you know this amazing temple in Tamil Nadu..?

Next Post

அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Mon Dec 8 , 2025
இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]
rain

You May Like