2 என்ஜின்கள் மீதும் பறவைகள் மோதினால் வேகத்தை அதிகரிக்கும் சக்தி கிடைக்காமல் விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என DGCA தகவல் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர். தற்போதைய தகவலின்படி 133 பேர் உயிரிழந்துள்ளனர். அனுபவமிக்க கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் தலைமையில் இந்த விமானம் இயங்கி வந்ததாக விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது.
விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். உலகின் மிகவும் பாதுகாப்பான விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விமானம் விபத்தில் சிக்கியது இதுவே முதன்முறையாகும்.. இது நடுத்தர அளவிலான, இரட்டை எஞ்சின், அகலமான அமைப்பு கொண்ட ஜெட் விமானமாகும். எரிபொருள் திறன், வசதியான பயணிகள் அனுபவம் மற்றும் மின்னணு மங்கலான பெரிய ஜன்னல்கள் போன்ற புதுமையான வடிவமைப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்ற இந்த விமானம் முதன்முதலில் டிசம்பர் 15, 2009 அன்று பறந்தது.
போயிங் 787-8 ட்ரீம்லைனரின் முதன்மை அமைப்பு சுமார் 50 சதவீதம் கார்பன் ஃபைபர்-வலுவூட்டப்பட்ட பாலிமரால் ஆனது. இது இலகுவாகவும் எரிபொருள் திறன் கொண்டது. இந்த கோர விபத்துக்கு 2 என்ஜின்கள் மீதும் பறவைகள் மோதியதே காரணம் என DGCA தகவல் தெரிவித்துள்ளது.
தகவலின்படி, விபத்து காட்சிகளை பார்க்கும் போதும் விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு சரியான வேகத்தை எட்ட முடியவில்லை. 2 என்ஜின்கள் மீதும் பறவைகள் மோதினால் வேகத்தை அதிகரிக்கும் சக்தி கிடைக்காமல் விமானம் கட்டுப்பாட்டை இழக்கும். என்ஜிங்கள் தொடர்ந்து இயங்க முடியாமல் போனால் மட்டுமே விமானம் மேலிருந்து கீழே விழும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
Read more: அகமதாபாத் விமான விபத்து.. அவசர உதவி எண்களை அறிவித்த ஏர் இந்தியா..