சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.05.2025. வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் ஆகியோர்களைக் கொண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், எரிவாயு நுகர்வோர்களுக்கான மே-2025 மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 30-ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக எரிவாயு வாடிக்கையாளர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு முகவர்கள் ஆகியோர்களைக் கொண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
வருகின்ற 30.05.2025, வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறை எண்.115-இல் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Read More: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 2025 செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு