fbpx

அட இன்னுமாப்பா இந்த கொடுமை எல்லாம் நடக்குது? கண்மாயில் குளிக்கச் சென்ற பட்டியல் இன பெண்களுக்கு ஏற்பட்ட துயர சம்பவம்!

நாடு அறிவியல் தொழில் நுட்பத்திலும் விண்வெளி ஆராய்ச்சியிலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால் ஆசியாவில் மிக விரைவில் வல்லரசு நாடாக இந்தியா முடிசூட காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

அதோடு பெண்கள் சுதந்திரம், பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு என பேசி வருகிறார்கள் ஆனால் இவை அனைத்தும் வெறும் மேடைப்பேச்சுக்களாக மட்டுமே இருக்கின்றனவே தவிர நடைமுறைக்கு இதுவரையிலும் சாத்தியப்படவில்லை.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின பெண்கள் பெருங்காடு கண்மாயில் நீராடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த பகுதியை வழியாக வந்த வேறு சில சமூகத்தைச் சார்ந்த நபர்கள் குளித்துக் கொண்டிருந்த பட்டியலின சமூக பெண்களைப் பார்த்து, இந்த கண்மாயில் நீங்கள் குளிக்க கூடாது என்று மிரட்டியதுடன், மிகவும் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

அத்துடன் அந்த பெண்களின் ஆடைகளை தூக்கி முள் காட்டுக்குள் வீசிவிட்டு போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த சம்பவம் தொடர்பாக நாகுடி காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கின்றனர் அந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தலைமறைவான ஐயப்பன், முத்துராமன் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இறையூர் பகுதியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் சாதிய தீண்டாமை கடைபிடிக்க பட்டதாக இதற்கு முன்னரே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த பரபரப்பு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னரே கீரனூர் அருகே தொடையூர் அறந்தாங்கி அருகில் இருக்கக்கூடிய கூத்தங்குடி என்று அடுத்தடுத்த தீண்டாமை சம்பவங்கள் புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பட்டியலின பெண்களிடம் விசாரித்த போது அன்று நாங்கள் கன்வாயில் குளித்துக் கொண்டு இருந்தோம். அப்போது அந்த பகுதிக்கு வந்த மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை இந்த குளத்தில் நீராடக்கூடாது என்று ஏற்கனவே எச்சரித்திருக்கிறோம். பிறகு ஏன் இங்கே வருகிறீர்கள் என்று ஜாதியின் பெயரை சொல்லி இழிவாக பேசியதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் உங்களுடைய உடைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்று முள்ளு காட்டுக்குள் போட்டுவிட்டார்கள். ஆகவே அதற்கு மேல் எங்களுக்கு அந்த பகுதியில் இருந்தால் எந்த விதமான பாதுகாப்பும் இல்லை என்பதை உணர்ந்து நாங்கள் குளித்துக் கொண்டிருந்தபடியே வீட்டிற்கு செல்ல முயற்சி செய்தோம். அப்போதும் எங்களை பின்தொடர்ந்து துரத்திக் கொண்டே வந்தார்கள் எனவும், எப்போது தான் எங்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்று தெரியவில்லை. என ஆதங்கமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

Next Post

செய்தியாளர்களிடம் எகிறிய அண்ணாமலை..!! கமலாலயத்தில் பரபரப்பு..!! வலுக்கும் கண்டனங்கள்..!!

Wed Jan 4 , 2023
பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக கேள்விமேல் கேள்வி கேட்டு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கு வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது என ஆவேசமாக கேட்டார். […]
செய்தியாளர்களிடம் எகிறிய அண்ணாமலை..!! கமலாலயத்தில் பரபரப்பு..!! வலுக்கும் கண்டனங்கள்..!!

You May Like