மாணவியை கடத்திச் சென்று தனியாக குடும்பம் நடத்திய இளைஞர்..! காதல் வலையில் சிக்கியது எப்படி?

தட்டச்சு பயிற்சிக்கு சென்ற மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆசிரியரின் மகள் 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தினமும் தட்டச்சு பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று தட்டச்சு பயிற்சி வகுப்புக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவே இல்லை. இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் சிறுமியை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

காதல்.. கேட்டதுமே கரண்ட் பாஸ் ஆகுதா பாஸ்.. உங்கள் காதலை ஜெயிக்க வைக்கும்  கிரகங்கள்! | Love Marriage Successful astrology remedies - Tamil Oneindia

இந்நிலையில், மாயமான சிறுமியை கோவை பட்டணம் புதூரை சேர்ந்த அருண்பாண்டியன் (22) என்ற இளைஞர்தான் கடத்திச் சென்றது தெரியவந்தது. வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த அருண்பாண்டியன், வேலை விஷயமாக பாளையம்பட்டி சென்றிருந்தபோது அந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுள்ளார். இந்த விவரங்கள் தெரியவந்ததும் தனிப்படை போலீசார் கோவை விரைந்தனர். இளைஞர் அருண்பாண்டியன் சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது. பின்னர், இருவரையும் பிடித்து விசாரித்த போலீசார், சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அருள்பாண்டியனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Chella

Next Post

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் கோவை, நீலகிரியில்.. கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்..!

Sun Jul 10 , 2022
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட வானிலை அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டத்துடன் கானப்படும், மேலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் […]

You May Like