2026 சட்டமன்ற தேர்தலில் DMK கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும்…! அடித்து கூறும் செல்வப்பெருந்தகை…!

selva 2025

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.


நாகர்கோவிலில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்; சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தக் கூட்டம், கிராம கமிட்டியினருக்கு நவீன ஐ.டி. கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். வரும் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று எம்.பி.எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டணி குறித்தும், எந்த தொகுதிகளைக் கேட்க வேண்டும், எவ்வளவு தொகுதிகள் கேட்க வேண்டும் போன்றவை குறித்தும் கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.

வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் இண்டியா கூட்டணி வெற்றிபெறும்.தவெக தலைவர் விஜய், மதவாத சக்திகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. பாஜக மதவாதக் கட்சி. காங்கிரஸ் கட்சி எல்லோருக்குமான கட்சி, ஜனநாயகத்தை விரும்பும் கட்சி. தேர்தலை மட்டும் குறிக்கோளாக கொண்டு காங்கிரஸ் செயல்படுவதில்லை. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே செயல்படுகிறது

Vignesh

Next Post

நாடே அதிர்ச்சி!. ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை செய்த 741 பேர் பலி!. குஜராத்தில் பயங்கரம்!

Sun Jul 6 , 2025
குஜராத்தில் சட்டவிரோதமாக ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை செய்த 2,352 பேரில் 741 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக […]
741 patients died stem cell trials 11zon

You May Like